இந்தி மட்டும் எதிர்க்கிற உன்ன மாதிரி காண்டு புடிச்சவன் எண்ணம் ஈடேறாது – நடிகை ஆர்த்தி காட்டம்.

0
1475
aarthi
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் கூட #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் கூட கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரெண்டிங்கில் வந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்தி மொழியை கற்பது குறித்து பிரபல நடிகை ஆர்த்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவு பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. சமீபத்தில் நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு என்று பதிவிட்டிருந்தார். நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்.ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு..அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்… இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரத என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு ட்விட்டர் வாசி ஒருவர், கலைக்கு மொழி இல்ல மூதேவி, பயிற்று /அதிகார மொழியாக வர கூடாதுனு தான் பேச்சு இங்க என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஆர்த்தி, அடேய் அரவேக்காட்டு முட்டா பயலே பயிற்று /அதிகார மொழியா ஆங்கிலம் இருக்கே அது மட்டும் உனக்கு இனிக்குதோ?? இந்தி மட்டும் எதிர்க்கிற உன்ன மாதிரி காண்டு படிச்சவன் எண்ணம் ஈடேராது ..போட அங்கிட்டு என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இந்திய மொழிகளில் ஒன்று இந்தி அது வேண்டானு எதிர்பீங்க ஆனா எங்கேயோ இருந்து வந்து நம்மை அடிமை படுத்தியிருந்த ஆங்கிலத்தை அரவனைப்பீங்க என்றும் கூறியுள்ளார் ஆர்த்தி.

Advertisement