பிக்பாஸ் வீட்டுக்கே சென்று ஐஸ்வர்யாவை கேவலப்படுத்திய ஆர்த்தி.! பிக் பாஸ் இது உண்மையா..?

0
822
Aarthi
- Advertisement -

காமெடி நடிகையும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆர்த்தி பிக் பாஸ் 2 வை விமர்சிக்கும் ஒரு வாடிக்கையாளராகவே மாறிவிட்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் விமர்சித்து அடிக்கடி ட்வீட் செய்து வருகிறார் நடிகை ஆர்த்தி.

-விளம்பரம்-

- Advertisement -

ஐஸ்வர்யா ஆகியோர் வாரா வாரம் காப்பாற்றபட்டு வருவது தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் காமெடி நடிகையும், முன்னாள் போட்டியலுருமான நடிகை ஆர்த்தி ஐஸ்வர்யாவின் அம்மா தான் பிக் பாஸ் மாமியார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தொடர்ந்து காப்பாற்றபட்டு வருவதால் ஐஸ்வர்யாவிற்கும் பிக் பாஸ்ஸிற்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு மீம்கலும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதிலும் சென்ராயனிற்கு பதிலாக ஐஸ்வர்யா காப்பற்றபட்டவுடன் ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து கேவலமான பல பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நடிகை ஆர்த்தி, ஐஸ்வர்யாவிடமே பிக் பாஸ் மருமகள் நீ தான் என்று நேரடியாக கூறிவிட்டார்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளர்களான வையாபுரி, சினேகன், காயத்ரி ரகுராம், ஆர்த்தி ஆகியோர் செல்கின்றனர். அந்த வீடியோவில் ஐஸ்வர்யாவிடம், தமிழ் நாட்டின் திருமகளே பிக் பாஸ்ஸின் மருமகளே என்று ஆர்த்தி கூறுகிறார்.

ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ்ஸின் மாமியார் ஐஸ்வர்யாவின் அம்மா தான் என்று கிண்டலடித்திருந்த ஆர்த்தி, தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவுடன் வெளிப்படையாகவே ஐஸ்வர்யாவை பிக் பாஸ்ஸின் மருமகளே என்று நேரடியாகவே கிண்டல் செய்துள்ளார். ஆனால், இதை ஐஸ்வர்யா விளையாட்டாக எடுத்துக்கொள்வாரா இல்லை இதனையும் ஒரு பெரிய பிரச்சனையாக மாற்ற போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement