பீட்டர் பவுலாக பவர் ஸ்டார், எலிசபத்தாக யார் தெரியுமா. இந்த பிக் பாஸ் 3 நடிகை தான்.

0
9795
vanitha
- Advertisement -

சமூக வலைதளத்தில் தற்போது வேண்டுமானல் மீரா மிதுன் ஹாட் டாபிக்காக இருக்கலாம். ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயமாக இருந்தது வனிதாவின் மூன்றாம் திருமண விவகாரம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தது.

-விளம்பரம்-

முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் பீட்டர் பவுலின் மனைவி போலீசிலும் புகார் அளித்திருந்தார். இந்த விகாரத்தில் பல்வேறு பிரபலங்களும் வனிதாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் கதையை பிக் பாஸ் போட்டியாளரான ஆர்த்தி குறும்படமாக எடுத்துள்ளார். இதில் பீட்டர் பவுலாக பவர் ஸ்டாரும், எலிசபத்தாக மதுமிதாவும், வனிதாவாக ஆர்த்தியும் நடித்துள்ளனர்.

- Advertisement -

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆர்த்தி,கவலைகள் மறந்து சிரிக்க குழந்தைகளா இருக்கனும்னு அவசியமில்லை. இந்த promo உங்களை குழந்தையாவே மாத்தீடும் பாருங்க என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்த போது மதுமிதா மற்றும் வனிதாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை அனைவரும் அறிவார்கள். சொல்லப்போனால் வனிதா தான் மதுமிதா கேப்டனாக இருந்தால் நாங்கள் யாரும் ஒத்துழைக்கமாட்டோம் என்று கூறியதாலும் அதனால் தான் மதுமிதா தற்கொலை வரை சென்றதாகவும் கூறப்பட்டது.

அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த வனிதா சேரனை தவிர யாரிடமும் பேசவில்லை. அதே போல வனிதாவின் மூன்றாவது திருமணம் நடைபெற்ற போதும் மதுமிதா அதற்கு எந்த கருத்தும் சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் மதுமிதா , பீட்டர் மனைவியாக நடித்துள்ளதால் மீண்டும் வனிதா ஒரு பஞ்சாயத்தை கூட்டினாலும் கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement