நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாளை கொண்டாடிய இளம் பிக் பாஸ் நாயகன்.

0
32542
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது நடிகை ப்ரியா பவானி வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி கொண்டு வருகிறார். மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து காற்றின் மொழி படத்தை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் வைத்து “பொம்மை” படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த பொம்மை படம் சைக்கோ மற்றும் ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

- Advertisement -

நடிகை பிரியா பவானி சங்கர் தவிர மற்றொரு கதாநாயகியாக சாந்தினி இந்த படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். இந்நிலையில் இன்று நடிகை பிரியா பவானி சங்கர் இன் பிறந்த நாள். மேலும், இந்த பொம்மை படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை பிரியா பவானி சங்கர் பிறந்த நாளன்று வெளியிட்டு உள்ளார்கள். மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டவர் அமிதாப் பச்சனின் சக நடிகரும், ரஜினியின் மருமகனும், தளபதியின் திரைத்துறை தம்பியும், சர்வதேச நடிகருமான அசுரன் தனுஷ் தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளார்” என்று கூறியுள்ளார். இன்று காலை 11 மணி அளவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று நடிகை பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாளை ஹிரிஷ் கல்யாண் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அதாவது ஹிரிஷ் கல்யாண் நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் அவர்கள் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ என்ற படத்தை தமிழ் ரீமேக் செய்கிறார்கள். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். மேலும், விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்.

-விளம்பரம்-

அதோடு கிருஷ்ணன் வசந்த் என்பவர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும், பிரியா பவானி ஷங்கர் பிறந்த நாளை ஹிரிஷ் கல்யாண் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா ஆவர். உணவு, காதல், பொழுதுபோக்கு என கலவையாக இந்த படம் உருவாகி வருகிறது. அதோடு இந்த படம் ஒரிஜினல் வெர்ஷனலில் இருந்து வேறுபட்டு இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் டீஸன்டான எண்டர்டெயினராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement