பட ப்ரோமோஷன்னு நினைத்தால் உண்மையாகவே கல்யாணமா – தன் வருங்கால மனைவியுடன் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட புகைப்படம்.

0
494
harish
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படம் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டாகி இருந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியானது. ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் திருமணம் நடக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

ஹரிஷ் கல்யாணின் லேட்டஸ்ட் போஸ்ட் :

சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விஜயதசமி, ஆயுத பூஜை வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவர் தான் ஹரிஷ் கல்யாண் காதலியா என்று கமன்ட் செய்ய ஒரு சில ரசிகர்களோ இதோ ஏதாவது படத்தின் ப்ரோமோஷன் பற்றிய அறிவிப்பாக இருக்கும் என்று நினைத்து வந்தனர்.

ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கை :

இப்படி ஒரு நிலையில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள். அதேபோல இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள்.

-விளம்பரம்-

முக்கியமான பயணத்தின் தொடக்கம் :

நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனது பயணத்தின் மிக திருப்திகரமான பகுதியாகும். இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

வருங்கால மனைவி நர்மதா :

எங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர் திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள், பத்திரிகை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கை பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement