இயக்குனரான சந்தான பாரதி மகன்.! ஹீரோ இந்த பிக் பாஸ் நடிகர் தான்.!

0
871
sanjay-bharathi
- Advertisement -

பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி நாங்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். புத்தகம், ஜன்னல் ஓரம், ஜீவா, மாஸ், தேவி, வனமகன், கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இயக்குநர் விஜய்யிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சஞ்சய் பாரதி, தற்போது இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படத்தை சஞ்சய் இயக்குகிறார்.

- Advertisement -

காதல் கலந்த அதிரடி படமாக இது உருவாகவிருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. மேலும், தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் பேசுகையில், நான் பியார் பிரேமா காதல் படத்தில் வெகுளியான காதல் பாயாக நடித்திருந்தேன். தற்போது வெளியாக உள்ள இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு ஆக்ரோஷமான இளைஞ்சராக நடித்துள்ளேன். இனி வரும் படத்தில் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருந்து வந்தேன். அதற்கு சஞ்சய் பாரதியின் படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement