தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘சிந்து சமவெளி’. இது தான் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம். இதனைத் தொடர்ந்து ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்தார் ஹரிஷ் கல்யாண். ஆனால், இந்த எந்த திரைப்படமும் ஹரிஷ் கல்யாணுக்கு எந்த ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி தரவில்லை.
அதன் பிறகு தமிழ் திரையுலகுடன் நமது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகர் ஹரிஷ் கல்யாண், அடுத்ததாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார். தெலுங்கில் ‘ஜெய் ஸ்ரீ ராம், காதலி, ஜெர்சி’ ஆகிய மூன்று படங்களில் நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். 2017-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் ஒரு போட்டியாளராக இருந்தார்.
இதையும் பாருங்க : ஒரு பக்கம் என் அம்மா, இன்னொரு பக்கம் என் தங்கை. இப்படி தான் இந்த படத்தை பார்த்தேன்- பிரபல இயக்குனர் ட்வீட்.
‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அதன் பிறகு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது.
ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளி வந்த ‘தாராள பிரபு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை தான் அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார்.
இதையும் பாருங்க : ‘அப்போ படிக்க போல’ ஆயுத எழுத்து சீரியல் நடிகை வகுப்பறையில் செய்த அலும்பலை பாருங்க.
அப்புகைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ‘தாராள பிரபு’ படத்தின் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் அப்படத்தில் நடித்திருந்த பேபி நிகிதாவும் இருந்தார். இதில் இன்னொரு சர்ப்ரைஸ், நிகிதா ட்வின்ஸ் என்பதால் அவரது சகோதரி நிதிதாவும் உடன் இருந்தார். இருவருக்கும் உள்ள வித்தியாசங்களை கண்டு புடியுங்கள் பார்ப்போம் என ஹரிஷ் கல்யாண் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.