பெண் ரசிகைக்கு ஹரிஷ் கல்யாண் செய்த செயல். வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணின் தோழி.

0
32869
harsih-kalyan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பல்வேறு நடிகர்கள் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஹரிஷ் கல்யானும் ஒருவர். தமிழில்கடந்த 2010 ஆம் ஆண்டு அமலாபால் அறிமுகமான ‘சிந்து சமவெளி’ படத்தில் ஒரு கல்லூரி இளம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் ஹரிஷ் கல்யாண் ஒரு பிரபலத்தை ஏற்படுத்தித் தரவில்லை என்பதே உண்மை.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பின்னர் அரிது அரிது சட்டப்படி குற்றம் சந்தாமாமா பொறியாளன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இந்த படங்கள் எதுவும் கவனிக்கப்படவில்லை மேலும் 2016 ஆம் ஆண்டு இவர் நடித்த வில் அம்பு திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆனால், இவருக்கு பெயரும் புகழும் ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தான். இந்த சீசனில் நடிகர் ஹரீஷ் கல்யாண் வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கினார். இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றதன் மூலம்பிரபலத்தின் பிரபலத்தின் உச்சிக்கே சென்றார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமும் ஆர்மியும் உருவானது. அதன் பின்னர் இவர் பிக் பாஸ் ரைசாவுடன் நடித்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படமும் மாபெரும் வெற்றியடைந்த்து. அதிலும் குறிப்பாக இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உருவாகினர். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கைகளின் ஆதரவு தான் அதிகம் இருந்து வருகிறது.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் live chat செய்வது வழக்கம். அதேபோல தன்னை பற்றி விமர்சிக்கும் நபர்களுக்கு ஹரிஷ் கல்யாண் மிகவும் பொறுமையாகவே பதிலளிப்பார் இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் பெண் ரசிகை ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திட்டித் தீர்த்திருக்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்து வருகிறார். சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டிருந்தார் ஹரிஷ் கல்யாண் இந்த அறிவிப்பால் இவரது ரசிகர்கள் ஹரிஷ் கல்யாண் பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர் ஆனால் பெண் ரசிகை ஒருவர் ஹரிஷ் கல்யாண் இடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அதில், உங்களுக்கு உங்களை ஆதரிக்கும் நபர்கள் மட்டும் தான் வேண்டுமா உங்களின் அன்பை எதிர்பார்க்கும் உங்களது ரசிகை உங்கள் ஆதரவை எதிர் பார்த்தால் அவர்கள் நீங்கள் பிளாக் செய்து விடுவீர்களா? அன்பும் ஆதரவும் இரண்டு பக்கமும் கொடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். எனவே, அதை கற்றுக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஹரீஷ் கல்யாண் என்னைப் பற்றியும் எனது ரசிகர் பற்றியும் தவறாக பேசும் வரை நான் யாரையும் பிளாக் செய்ய மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு அந்த ரசிகரை அவள் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒரு ஆதரவான வார்த்தைகளை தான் அவளுக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement