இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் போகும் பிரபல நடிகை..! புகைப்படத்துடன் வெளியிட்ட ஆதாரம் .!

0
357
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக சென்று வருகிற வண்ணம் இருக்கின்றனர். கடந்த ஆண்டின் பிக் பாஸ் போட்டியாளர்களான ஓவியா மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்து விட்டனர்.

இவர்களை தொடர்ந்து சமீபத்தில் கார்த்திக் நடித்த “கடைக்குட்டி சிங்கம் ” படத்தின் படக்குழுவினரும் சிறப்பு விருந்தினாராக சென்று வந்தனர். இந்நிலையில் தற்போது ”விஸ்வரூபம் 2′ படத்தின் படக்குழுவும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போவதாக ஒரு சில தகவல்களும் சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் வளம் வந்து கொண்டிருக்கிறது.

ஏற்க்னவே, ”விஸ்வரூபம் 2” படத்தின் இசை வெளியிட்டு விழாவும் பிக் பாஸ் மேடையில் தான் அரங்கேறியது. இதனால் ”விஸ்வரூபம் 2” படக்குழு பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்றாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மேலும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அந்த படத்தில் நடித்துள்ள பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டின் அருகில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை பூஜா குமார் ”நாங்கள் ஒரு இடத்திற்கு செல்ல போகிறோம், அது வெளியுலகில் இருந்து கொஞ்சம் தள்ளியுள்ள இடம். உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள் ” என்பது போல பதிவிட்டுள்ளார். எனவே, அவர் பிக் பாஸ் வீட்டிற்கு தான் செல்ல போகிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.