பிக் பாஸில் இன்று எலிமினேட் செய்யப்பட்டவர் இவர்தான்.! அதிகாரப்பூர்வ தகவல்.!

0
951

பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்தகட்ட எலிமிநேஷன் கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய மமதிக்கு பின்னர் அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்று அறிந்து கொள்ள மக்கள் ஆவளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று (ஜூலை 8) பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது நபராக அனந்த் வைத்தியநாதன் வெளியேற போவதாக அதிகார பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது.

bigg boss

இந்த வார நாமினஷன் லிஸ்டில் பொண்ணபலம், பாலாஜி, நித்யா , மும்தாஜ், ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாக நித்யா இருந்ததால் அவரை யாரும் நாமினஷன் செய்ய கூடாது என்ற விதி இருந்தது. அதே போல கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் முதல் ஆளாக பொன்னம்பலம் காப்பற்றபட்டார்.எனவே, அவர் இந்த வாரமும் காப்பாற்ற படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

சென்ற வாரம் ஓட்டிங் ப்ராஸஸ் போது மமதி மற்றும் அனந்த் வைத்தியநாதனிற்கு இடையை தான் கடும் போட்டி நிலவியது. ஆனால், மமதியா இல்லை அனந்தா என்று வந்த போது ரசிகர்கள் அனந்தை காப்பாற்றி பிக் பாஸ் வீட்டில் அமர வைத்தனர்.ஆனால் , இந்த வாரம் நித்யா மற்றும் அனந்த் இடையை கடும் போட்டி நிலவியதாகவும் இறுதியில் அனந்த் , நித்யாவை விட குறைந்த வாக்குகள் பெற்றிருப்த்தாகவும் தகவலகள் வெளியாகியுள்ளன.

Ananth-vaidyanathan-Bigg-Boss-Tamil-Season-2

தற்போது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனந்த வைத்தியநாதன் தான் வெளியேற போவதாக அதிகார பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது. அதுலமட்டுல்லாமல் இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே சக போட்டியாளர்கள் அனந்த்தை தான் குறை கூறி வந்தனர். அவரை பற்றி தப்பாக எதுவும் கூறவில்லை, அதற்கு மாறாக அவர் வயதில் மூத்தவர் என்றும் , அவரால் டாஸ்க்குகளை சரியாக செய்யமுடியாது என்றும் கூறிவந்தனர். இதே போல தான் மக்களும் நினைத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.