சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்தமுறை முதல் நாளே பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல புது முக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இசைவாணியும் ஒருவர். கடந்த வாரம் பிக் பாஸில் கடந்து வந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் பேசிய இசைவாணி, தனது கஷ்டங்களை பேசி இருந்தார்.
இவர் வடசென்னை பூர்வீகமாகக் கொண்டவர்.இவரை அனைவரும் கானா இசைவாணி என்றுதான் அழைப்பார்கள். தனக்கு உரிய கானா பாடலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் இசை. மேலும், ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசை துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது துறையில் இவருடைய கனவு, லட்சியம்.
இதையும் பாருங்க : முதல்ல கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கல – தாமரை செல்விவின் மாமியார் (கணவர் என்ன வேலை செய்கிறார் பாருங்க)
அதுமட்டும் இல்லாமல் 2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசையை தேர்வு செய்து பெருமைப்படுத்தியது பிபிசி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்து வந்த பாதை டாஸ்கில் இவருக்கு திருமணம் ஆனதை பற்றி பேசவே இல்லை. பின் இவர் பவானி ரெட்டியுடன் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பவானி ரெட்டி தன்னுடைய கணவரின் இறப்பைப் பற்றி பேசினார்.
அதைக்கேட்ட இசைவாணி அவளைத் தேற்றும் விதமாக தன்னுடைய திருமண முறிவை பற்றி அவரிடம் மட்டும் ரகசியம் சொன்னார். தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் இவர்தான் இசை வாணி கணவரா? ஏன் இவர்கள் பிரிந்து விட்டார்கள்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதுகுறித்து இசைவாணியின் நெருங்கிய தோழிகள் பேசிய போது, 2019 ஆம் ஆண்டு ட்ரம்ஸ் கலைஞர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் அவசர அவசரமாக தான் நடைபெற்றது. அவளின் திருமண வாழ்க்கை கண்டிப்பாக சரியாக இருக்காது என்று தெரிந்தும் அவள் எவ்வளவோ அதை இழுத்துப் பிடித்தால். ஆனாலும் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின்னர் அவள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தால் நாங்கள் தான் அவளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தோம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி அவளது மன அழுத்தத்தை சரிசெய்யும் என்று நினைத்தோம். அவளின் திருமண வாழ்க்கை பற்றி கேட்டால் அவள் மீண்டும் மன அழுத்தத்திற்கு சென்றுவிடுவார். அதேபோல ஒருவரின் திருமண வாழ்க்கை பற்றி ஏன் சொல்லவில்லை என்று யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். மேலும், அவள் அதை சொல்லி இருக்கலாம் அதை எடிட் செய்து கூட இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.