நிரூப் மற்றும் வருண் குறித்து புட்டு புட்டு வைத்த ஐக்கி பெரி – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
443
Iykki
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 58 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. வழக்கம்போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு சலசலப்பும், சச்சரவும் தொடங்கி விட்டது. அதிலும் நாளுக்கு நாள் போட்டிகள் சவால்கள் அதிகமாகுதல் போட்டியாளர்கள் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொண்டு விளையாடி வருகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க, வாரம் வாரம் பிக் பாஸ் வீட்டில் எழிமினேஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் கமலஹாசனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானதால் எழிமினேஷன் இருக்காது என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேறி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு முதல் முறையாக ரசிகர்களுடன் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஐக்கி பெர்ரி பேசி இருக்கிறார். தற்போது அவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் நிருப் மற்றும் வருண் குறித்து சில உண்மைகளை பேசியிருக்கிறார்.

இதையும் பாருங்க : ஹன்சிகா முதல், பூஜா ஹெக்டே வரை Social Media-வில் மதுவை விளம்பரப்படுத்தும் முன்னணி நடிகைகள் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

- Advertisement -

அதில் அவர் நிரூப் பற்றி கூறியது, நிரூப் பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், என்னைப் பொறுத்தவரை நிரூப் தந்திரமாக விளையாடுபவர். அதோடு அவர் நியாயமாகத்தான் விளையாடுகிறார். குறிப்பாக அவரை நான் அந்த பொம்மைகள் டாஸ்கில் தான் நன்றாக புரிந்துக்கொண்டேன். அந்த டாஸ்கில் நாங்கள் இருவரும் விளையாடும் போது என்னை அவர் கைப்பாவையாக பயன்படுத்தினார் என்று வீட்டில் உள்ள சிலர் குற்றம் சாட்டி இருந்தார்கள். ஆனால், அதெல்லாம் உண்மை கிடையாது. நாங்கள் இருவரும் நேருக்கு நேராக மோதி விளையாடி யார் வெற்றி பெறுகிறார்களோ? அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று தான் நான் சொன்னேன்.

Varun And Niroop Fight Reel or Real?The Bigg Boss Tamil 5 Promo

நிரூப்பும் அதை ஏற்றுக்கொண்டார். அப்படித்தான் நாங்கள் விளையாடினோம். அதேபோல் வருண் பற்றி சொன்னால், அவர் நன்றாக விளையாடுபவர். என்னை பொறுத்தவரை அவர் யாரிடமும் பர்சனலாக எதையும் எடுத்து விளையாடுவதில்லை. குறிப்பாக என்னிடம் அவர் பர்சனலாக கோபம் காட்ட வில்லை. ஆனால், நிரூப் உடன் விளையாடும் போது மட்டும் அவர் பர்சனலாக சிலவற்றை எடுத்துக் கொண்டது போல் எனக்கு தோன்றியது என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement