5 போட்டியாளர்களை சிறையில் அடைத்த ஐஸ்வர்யா.! புகைப்படம் உள்ள.!

0
718
Aishwarya-Bigg-BOss

ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் வீட்டின் ஹைலைட்டாக இருந்து வருகிறார். இந்த வாரம் பிக் பாஸ் பாஸ் வீட்டின் தலைவியாக இருந்து வரும் ஐஸ்வர்யாவிற்கு ”ராணி’ என்ற பதவி கிடைத்ததும் இவர் செய்து வரும் சில செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.

Aishwarya-dutta

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியிலும் சரி, இன்று ஒளிபரப்பான சில ப்ரோமோ விடியோவில் சரி ஐஸ்வர்யா நடந்து கொண்டு வரும் விதம் பார்ப்பவர்களின் பிபி-யை ஏற்றி வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் அடுத்த அடாவடி செயலாக இன்று(ஆகஸ்ட் 1) சக போட்டியாளர்கள் சிலரை பிக் பாஸ் சிறையில் அடைத்துள்ளார் ஐஸ்வர்யா.

அதில் பொன்னம்பலம், சென்ட்ராயன், மஹத், ஷாரிக் மற்றும் ரித்விக்கா ஆகியோர் பிக் பாஸ் சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இதில் பாலாஜி இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. இவர்கள் 5 பெயரையும் தற்போது சர்வாதிகார ராணியாக இருந்து வரும் ஐஸ்வர்யா தான் சிறையில் அடைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

-விளம்பரம்-

bigg boss

இதன் மூலம் தன்னை புறம் பேசிய அனைவரையும் பழிவாங்குவதற்காகவே ஐஸ்வர்யா இது போன்ற செயல்களை செய்து வருகிறார் என்பது சற்று தெளிவாகவே தெரிகிறது. ஐஸ்வர்யா செய்யும் இந்த செயல்கள் நிகழ்ச்சிக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் ஐஸ்வர்யாவின் இந்த கீழ் தரமாக செயல்கள் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement