தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஜனனி ஐயர். இவர் கர்நாடகாவில் கத்திவாக்கம்-பெங்களூரில் பிறந்தவர். இவர் தமிழ் பிராமின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் சென்னையில் உள்ள கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். இவர் முதன் முதலாக மாடலிங் தான் செய்தார். பின் இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் 2009ஆம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்திலும், 2010ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
அதற்குப் பின்பு தான் 2011ஆம் ஆண்டு விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும், 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜனனி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ஜனனி நான்காம் இடத்தைப் பிடித்தார்.
ஜனியின் கூர்மன் படம்:
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் கூர்மன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பிரையன் பி.ஜார்ஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஜனனி, பாலசரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும், மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு வித்தியாசமான முறையில் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் இயக்குனர்.
கூர்மன் படம் பற்றிய தகவல்:
கூடிய விரைவில் இந்த படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தை எம் என்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்து உள்ளார். மேலும், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இதற்கு பத்திரிகையாளர் சந்திப்பை சில தினங்களுக்கு முன்பு படக்குழு ஏற்படுத்தி இருந்தது. இதில் ஜனனி, பாலசரவணன் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
நடிகை ஜனனி அளித்த பேட்டி:
அப்போது இந்த படத்தின் அனுபவத்தை நடிகை ஜனனி கூறியிருப்பது, இயக்குனர் பிரையன் பி.ஜார்ஜ் எனக்கு தெகிடி படத்திலிருந்து நன்றாக தெரியும். நான் அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக நடிக்க வைத்தால் சண்டை போடுவேன் என்று சொல்லி இருந்தேன். நான் சும்மா காமெடிக்காக தான் சொன்னேன். ஆனால், உண்மையிலேயே அவர் என்னை நடிக்க வைத்து விட்டார். இந்த கதையை அவர் சொல்லும்போது வித்தியாசமாக இருந்தது. அதே போல் இந்த படம் முற்றிலும் வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். எங்களுக்கு நடந்த நிகழ்வை பார்த்திருந்தால் உங்களுக்கு அது நன்றாக தெரியும்.
படத்தில் நிகழ்ந்த மேஜிக்:
அதே அளவு ஆச்சரியம் படத்திலும் இருக்கு. அதுமட்டுமில்லாமல் படத்தில் ஒரு மேஜிக் கூட நடந்திருக்கிறது. ஒரே நாளில் 5 காட்சியளிக்கள் எடுக்கணும். ஆனால், அன்று நல்ல மழை. அதனால் மழையில் காட்சியை மாற்றி ஒரு காட்சி மட்டும் மழையில் எடுத்தால் எல்லா காட்சிகளையும் மழையில் எடுக்க வேண்டும். அதனால் மழை நின்று விடக்கூடாது என்று நினைத்தோம். அதற்கு ஏற்றவாறு கடவுளும் ஆசீர்வதித்தால் மழை நீக்காமல் பெய்தது. நாங்களும் அந்த கட்சியை எடுத்தோம். மேலும், அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்கும் . இப்படி பல விஷயங்கள் படப்பிடிப்பின் போது நிகழ்ந்தது என்று கூறியிருக்கிறார். இப்படி ஜனனி பேசி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.