சத்தியம் வாங்கிய ஜனனி.! உளறிக்கொட்டிய மஹத்.! மஹத் செய்த மோசமான செயல்.!

0
821
Mahat

சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி இங்கிருப்பதை அங்கே சொல்கிறார் என்று அவருக்கு அணைத்து போட்டியாளர்களும் அவரை ‘ஜால்ரா’ என்று குக்குறிப்பிட்டிருந்தனர். அதில் சக போட்டியாளரான மஹத்தும், வைஷ்ணவியை ‘ஜால்ரா’ என்று பட்டமளித்தார். ஆனால், அதே ‘ஜால்ரா’ வேலையை சமீபத்தில் மஹத்தும் பார்த்துள்ளார்.

shariq

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக இருந்து வருகின்றனர். அதில் ஜனனி ஐயர் பொன்னம்பலம் கேங்கில் தான் ஆதிக்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி ஐயர், மஹதிடம் ‘பொன்னம்பலம், ரித்விகா, சென்றாயன், பாலாஜி ஆகியோர் இந்த வாரம் ஷாரிக்கை நாமினேட் செய்ய சொன்னார்கள், அப்போது தான் அவருக்கு மக்கள் மத்தியில் அவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியும் என்று கூறினார்கள். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை.’ என்று கூறியதோடு, இந்த விடயத்தை ஷாரிக்கிடம் சொல்ல கூடாது என்று மஹத்திடம் சத்தியமும் வாங்கினார்.

ஆனால், ஜனனி ஐயர் கூறியதை அப்படியே நகல் எடுத்தது போல ஷாரிக்கிடம் கூறிய மஹத்’ பொன்னம்பலம், ரித்விகா, சென்றாயன், பாலாஜி எல்லோரும் உன்னயும், டேனியும் நாமினேட் பண்ணணும்னு முடிவு பண்ணி இருக்காங்க. என்று ஜனனி ஐயர் தன்னிடம் கூறியதாக மஹத், ஷாரிக்கிடம் அப்படியே ஒப்பித்து விட்டார்.

-விளம்பரம்-

Mahat

ஜனனி ஐயர் எப்போதும் பாலாஜி, பொன்னம்பலம், வைஷ்ணவி இருக்கும் கேங்கில் தான் இருக்கிறார். இருப்பினும் மஹத்திடம் இருந்த நம்பிக்கையில் தான் அவர்கள் கூறிய அனைத்தையும் மஹத்திடம் கூறினார். ஆனால், சிறுபிள்ளைகள் செய்வது போல ஜனனி கூறிய விடயத்தை ஷாரிக்கிடம் கூறியதை பார்க்கும் பொது தான் மஹாத் மீது மேலும், எரிச்சலை ஏற்படுத்துகிறது.

Advertisement