விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. இன்று (செப்டம்பர் 30) இந்த போட்டியின் வெற்றியாளர் வெற்றியாளர் யார் என்பது முடிவாகிவிடும். ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
நேற்றய நிகழ்ச்சியில் வித்யாசமாக நடைபெற்ற எலிமினேஷனில் ஜனனி வெளியேற்றபட்டிருந்தார். நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்த சில நடன கலைஞர்கள் போட்டியாளர்களுடன் நடனமாடிக்கொண்டிருந்தனர். பின்னர் ஒவ்வொரு போட்டியாளர்களையும் ஒரு குழு தனியாக சூழ்ந்து கொண்டு நடனமாடிக்கொண்டிருந்தனர்.
பின்னர் போட்டியாளர் அனைவரின் கண்களும் கட்டபட்டு பின்னர் ஒருவரை ஒருவர் பார்க்காத வண்ணம் ஒரு துணியை திரை போல மறைத்துக்கொண்டனர். பின்னர் எதிர்பாராத வண்ணம் ஜனனியை வீட்டின் மெயின் கேட் வழியாக நடன கலைஞர்கள் வெளியே அழைத்துச்சென்றனர்.
ஜனனி வெளியேறியதை யாரும் எதிர்பாராத நிலையில் அவர் வீட்டில் இருந்து சென்ற பிறகு பற்ற போட்டியாளர்களின் கண்களை திறந்தனர். ஜனனி இல்லை என்று தெரிந்ததும் ஜனனியின் நெருங்கிய தோழியான ரித்விகா மிகவும் அதிர்ச்சியடைந்தார்.
நேற்றைய நிகழ்ச்சியில் கமல் அவர்கள் போட்டியாளர் அனைவருக்கும் சலுகை ஒன்றை அளித்திருந்தார். அதில் போட்டியாளர்களில் யார் வெளியேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ 10 லட்ச ருபாய் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டு இப்போதே வெளியேறலாம் என்று அறிந்திருந்தார். ஆனால், அந்த பணத்தை யாருமே எடுத்துக்கொள்ளவில்லை. கண்டிப்பாக தானும் வெளியேற மாட்டோம் என்று மிகவும் நம்பி இருந்தார் ஜனனி.