பிக் பாஸ் ஜனனி வாங்கிய முதல் சம்பளம் இவ்ளோதானா..? அதை என்ன செய்தார் தெரியுமா.?

0
211
janani

தமிழ் சினிமா நடிகையான ஜனனி ஐயர் தமிழில் 2009 ஆம் ஆண்டு ‘திரு திரு துரு துரு’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் 2011 ஆம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன் ‘ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

Janani

பல புதுமுக காதனையாகிகளின் வருகையால் இவரால் முன்னணி நடிகை என்ற பெயரை எடுக்கமுடியாமல் போனது இதனால் இடையில் பட வாய்ப்புகள் தவித்து வந்தார் ஜனனி. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஜனனி. ஜனனி நடிப்பதற்கு முன்பாக மாடலிங் துறையில் இருந்து வந்தார். தனது முதல் மாடலிங் மூலம் கிடைத்த பணத்தை ஜனனி என்ன செய்தார் என்று சமீபத்தில் கூறியுள்ளார். நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நடந்த சந்தோசமான தருணங்களை ஏதாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வாழ்வில் நடந்த சந்தோசமான தருணங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர் .அப்போது ஜனனி பேசுகையில், தான் முதன் முதலில் மாடலிங் செய்து அதில் 2500 சம்பித்ததாகவும், அந்த பணத்தை தனது வீட்டில் வேலை செய்து கொண்டு இறந்தவரின் மகன் டூயூஷன் கட்டணம் கட்ட முடியாமல் கஷ்டபட்டுக் கொண்டிருந்த போது அந்த பையனுக்கு 2500 ரூபாயை கொடுத்து உதவியாகவும் கூறியிருக்கிறார். தனது முதல் சம்பளம் ஒரு பையனின் படிப்பிற்காக உதவியதை எப்போது நினைத்தாலும் தனக்கு சந்தோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஜனனி.

Janani-Iyer

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜனனிக்கு நல்ல பெயர் இருந்து வந்தது. ஆனால்,மஹத்திற்கு ஓவராக சப்போர்ட் செய்தது, ஆளுக்கு ஏற்றார் போல மாறிக்கொள்வது என்று ஜனனி இருந்து வந்ததால் இவர் மீது ரசிகர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியது. இருப்பினும் யாஷிகா, ஐஸ்வர்யா செய்ததை விட இவர் அந்த அளவிற்கு ஒன்றும் செய்யவில்லை என்றதால் மக்கள் இவரை இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்க வைத்து வருகின்றனர். அதே போல இன்று வெளியான பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவில் இருந்து இந்த வாரம் இவர் ஏவிக்ஷனில் இருந்து பாலாஜியால் காப்பற்றபட்டுள்ளார் என்றும் தெரிகிறது.