முதல் படத்திலேயே கையில் குழந்தையோடு நடித்துள்ள ஜனனி ஐயர். வைரலாகும் புகைப்படம்.

0
1009
Janani-Iyer

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஜனனி ஐயர். இவர் விஷால், ஆர்யா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அவன் இவன் படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதன் முதலாக மாடலிங் தான் செய்தார். அதற்குப் பின்பு இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பிறகு தான் இவருக்கு சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை ஜனனி அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

திரு திரு துரு துரு படத்தில் ஜனனி

2010 ஆம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற படத்தின் மூலம் தான் ஜனனி ஐயர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அஜ்மல், அமீர், ரூபா மஞ்சரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜனனி ஐயர் ஒரு விளம்பர மாடலாக கையில் குழந்தையோடு நடித்திருப்பார் கௌரவ தோற்றத்தில் நடித்து இருப்பார்.

- Advertisement -

இதற்கு பிறகு தான் இவர் 2011 ஆம் ஆண்டு அவன் இவன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும், 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஜனனி

தற்போது ஜனனி புதுமுக இயக்குனர் சந்தீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜனனிக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘தெகிடி ‘ படத்தில் ஜனனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும்.

-விளம்பரம்-
Advertisement