சினிமாவில் நடிக்க போகும் பிக் பாஸ் நடிகையின் தங்கை.! யார் தெரியுமா ?

0
775
Yashika

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர்களாக ஜொலித்து வருகின்றனர். அந்தவகையில் ரைசா, ஹரிஷ்கல்யாண் ,ஆரவ் ,யாஷிகா ஆனந்த் என்று பல்வேறு நபர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமே சினிமாவில் ஒரு பெரும் பிரபலம் கிடைத்தது.அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜனனி ஐய்யரின் தங்கையும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

- Advertisement -
Janani-iyer-sister

தமிழ் சினிமா நடிகையான ஜனனி ஐயர் தமிழில் 2009 ஆம் ஆண்டு ‘திரு திரு துரு துரு’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுகமானார். அதன் பின்னர் 2011 ஆம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன் ‘ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

ஜனனி ஐயருக்கு ஒரு அழகான தங்கையும் இருக்கிறார். அவரது பெயர் க்ரித்திகா, மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த போது ஜனனியை விட அவரது தங்கை அழகாக இருக்கிறார் என்று பலரும் கூறிவந்தனர். இந்த நிலையில் தற்போது கீர்த்திகாவும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறாராம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is kirthika-755x1024.jpg

அதுவும் தனது அக்கா நடிக்கும் படத்திலேயே அறிமுகமாகப்போகிறாராம் கீர்த்திகா, ஜனனி ஐயர் தற்போது தெகிடி நாயகன் அசோக் செல்வனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜனனி ஐயர் தங்கை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Advertisement