பிக் பாஸ் ஜனனியின் இரண்டு கையில் இருக்கும் ‘Tattoo’ ரகசியம் என்ன தெரியுமா..? வெளிவந்த உண்மை தகவல்

0
1366
Bigg-Boss-Janani-Iyer

விஜய் டிவியில் ஒளிபரப்பை வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் மத்தியில் மக்களுக்கு மிகவும் அபிமான போட்டியாளராக இருந்து வருபவர் நடிகை ஜனனி ஐயர் தான். அதே போல பிக் பாஸ் வீட்டில் பெரும்பான்மையான போட்டியார்களுக்கும் இவர் கொஞ்சம் அனுசரித்து போகும் நபராக தான் இருந்து வருகிறார்.

Janani-Iyer-In-Bigg-Boss-House

தமிழ் சினிமா நடிகையான இவர் தமிழ் 2009 ஆம் ஆண்டு ‘திரு திரு துரு துரு’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் 2011 ஆம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன் ‘ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் ஒரு டாட்டூ பிரியர் என்று தான் புலப்படுகிறது. தனது உடலில் மூன்று இடங்களில் டாட்டூ குத்தியுள்ள ஜனனி, கடவுள் பக்தியையும் கொஞ்சம் வைத்துள்ளார். அதனால் தனது கையில் விநாயகர் சின்னம் ஒன்றை குத்தியுள்ளார் ஜனனி.

Janani-Iyer-Tattoo

தனது வலது கையில் விநாயக கடவுளின் பெயரான கணேஷ் மற்றும் ஓம் என்று பச்சை குத்தியுள்ளார். இதனால் ஜனனி ஐயருக்கு கடவுள் பக்தி அதிகமோ என்று நினைக்க தோன்றுகிறது. அதே போல தனது வலது கை விரலிலும் பச்சை குத்தியுள்ளார். அதற்கு தனித்துவம் என்று அர்த்தமாம்.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.