பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்களுக்கு தொடங்கிய ஆர்மி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி மூன்று நாட்கள் ஆகி விட்டது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சி தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலிசாந்தி , விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் போட்டியாளர்கள் குறித்து கூறப்பட்டு இருந்தது.
பிக் பாஸ் சீசன் 6:
இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து, ஜனனிக்கு தான் இந்த முறை ஆர்மி துவங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜனனி போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
ஜனனி குறித்த தகவல்:
இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சிறு வயதில் பள்ளியில் எல்லோரும் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் தான் த்ரிஷா ஆக வேண்டும் என்று வகுப்பிலேயே தைரியமாக கூறியவர் ஜனனி. இதனை கமல் முன்னிலையில் ஜனனி கூறியபோது, த்ரிஷாவுக்கு ஒரு போட்டியாளர் வந்துவிட்டார் என கமல்ஹாசன் கூறினார்.
ஆர்மி தொடங்கப்பட்ட நபர்கள்:
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக கவர்ந்து இருக்கிறது. தற்போது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு தொடங்கிய உடன் இவருக்கு ஆர்மி தொடங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஆர்மி தொடங்கப்பட்டு இருப்பது ஜிபி முத்துக்கு தான். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான்.
ஜிபி முத்து:
டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், youtube என வீடியோ தளங்கள் எந்த youtube சென்றாலும் ஜிபி முத்துவின் வீடியோவை பார்க்க முடியும். இதனால் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களின் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இவர் நெல்லை தமிழில் தன்னை கிண்டல் செய்யும் நபர்களை திட்டக்கூடிய வார்த்தைகளும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் விதமாக இருக்கிறது. இவருக்கு தற்போது ஆர்மி தொடங்கப்பட்டு இருக்கிறது.