அமுதவானனையும் உன்னையும் இப்படி சொன்னா எப்படி இருக்கும் – விக்ரமன், ஷிவின் உறவை கொச்சைபடுத்திய ஜனனியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
348
vikraman
- Advertisement -

சிவனுக்கும் விக்ரமனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து பிக் பாஸ் போட்டியாளர் ஜனனி கூறி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த முறை நிகழ்ச்சியில் சிவின் கணேசன் என்ற திருநங்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இவர் வீட்டுக்கு ஒரே பையன். இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் இவர் அங்கேயே இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால், இவர் திரும்பி வந்ததை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் சிவின் கணேசன்:

அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லையாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா பேசுவார் என்று எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிவின் கணேசன் மிகச் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார். இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி வருகிறார்.

-விளம்பரம்-

சிவின்-விக்ரமன் உறவு:

சிவினுக்கு வீட்டில் உள்ள பல பேருடன் பிரச்சனை இருந்தாலும் விக்ரமனிடம் நல்ல நட்பில் தான் இருந்து வருகிறார். மேலும், இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக விக்ரமன் அல்லது சிவின் தான் இருப்பார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் எபிசோடில் ஜனனி, சிவினை பார்த்து விக்ரமன் உங்களுடைய பாய் பிரண்டா? என்று கேட்டார். அதற்கு சிவின், ஜனனியை அடித்து அவர் எனக்கு அண்ணன் மாதிரி என்று கூறியிருக்கிறார்.

சிவின் கேட்ட கேள்வி:

உடனே சிவின், அமுதவாணன் உனக்கு அண்ணனா? என்று ஜனனியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஜனனி, அவர் அண்ணன் கிடையாது போட்டியாளர் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலருமே, ஜனனி அமுதவாணனிடம் நெருக்கமாக பழகி இருக்கிறீர்கள். அதற்காக, அவர் உங்களுடைய பாய் பிரண்ட் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? சிவின் ஒரு திருநங்கை என்பதால் நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசுவீர்களா? என்று கண்டித்து பதிவு போட்டு வருகிறார்கள்.

ஜனனி குறித்த விமர்சனம்:

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஜனனிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்தது. இதனால் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிவரை செல்வார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு ஜனனி, அமுதவானனுடன் சேர்ந்து செய்யும் செயல்களெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் இனிவரும் நாட்களில் ஜனனி நிகழ்ச்சியில் நீடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement