பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் 10 வது வாரத்திற்கான நாமினேஷன் ரிசல்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 63 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். மேலும், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல வித்தியாசமான டாஸ்களை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் மாறுவேட டாஸ்க் கொடுத்திருந்தார்கள். சினிமா பிரபலங்களின் கெட்டப்பில் போட்டியாளர்கள் மாறி அவர்களைப் போல செய்ய வேண்டும் என்று கொடுத்திருந்தார்கள். இதில் போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார்கள். கடந்த வார இறுதியில் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்த மூன்று போட்டியாளர்களை பிக் பாஸ் தேர்வு செய்ய சொல்லி இருந்தார். அதில் மைனா, ரக்ஷிதா, அமுதவாணன் ஆகியோர் சிறந்த போட்டியாளர்களாக தேர்வாகியிருந்தனர்.
கடந்த வாரம் நடந்த டபுள் ஏவிக்ஷன் :
அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் டபுள் எவிக்சன் என்று கமலஹாசன் அவர்கள் அறிவித்து இருந்தார். நாமினேசன் பட்டியலில் ஆயிஷா, ஜனனி, ராம், அசீம், ஏ டி கே, வி ஜே கதிரவன் ஆகியோரின் பெயர் இடம் பெற்று இருந்தது. இதில் வழக்கம் போல் அசீம், கதிரவன் அதிக வாக்குகள் பெற்று தப்பித்து விட்டார்கள். ராம் மற்றும் ஆயிஷா தான் குறைந்த வாக்குகள் பெற்று அனைவரும் எதிர்பார்த்த மாதிரி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்கள். இதனை அடுத்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி தேர்வு நடைபெற்றது. இதில் ரக்ஷிதா, மைனா, அமுதவாணன் பங்கு பெற்றிருந்தார்கள்.
கேப்டனான மைனா :
இவர்கள் பேம்பர்ஸ் அணிந்து கொண்டு தண்ணியை குவளையில் நிரப்ப வேண்டும். இதில் மைனா விரைவாகவே தண்ணியை நிரப்பி இருந்தார். இதனால் இந்த வாரம் கேப்டனாக மைனா தேர்வாகி இருக்கிறார். ஏற்கனவே மைனா கேப்டன் ஆகவும் தேர்வாகி இருந்தது அனைவரும் அறிந்ததே. கடந்த சில வாரங்களாகவே மைனா நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாமல் தப்பித்துக் கொண்டே வருகிறார். மைனா நாமினேஷன் பட்டியலில் வந்து இருந்தால் வெளியேறி விடுவார் என்றெல்லாம் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். அதோடு விஜய் டிவி மணிகண்டனையும், மைனாவையும் தப்பிக்க வைக்கிறதோ என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.
வெளியேறிய ஜனனி :
போல் இந்த வாரமும் மைனா கேப்டன் ஆகி நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்திருக்கிறார். இதனை எடுத்து இந்த வாரம் நாமினேஷனில் ரக்ஷிதா, மணிகண்டன், அசீம், விக்ரமன், ஏடிகே, ஜனனி. இதில் அதிகமாக ஜனனி,adk, மணிகண்டன் ஆகியோர் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ADK வெளியேறி இருக்கிறார். பல்வேறு தனியார் வலைதளத்தில் நடந்தப்பட்டு வரும் Unofficial Voteல் மணிகண்டன் மற்றும் adk தான் குறைவான வாக்குகளை பெற்றுஇருந்த நிலையில் தற்போது ஜனனி வெளியேறி இருப்பது பெரும் Twist ஆக அமைந்து இருக்கிறது. .