பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் 10 வது வாரத்தில் ஜனனி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 70 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். மேலும், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல வித்தியாசமான டாஸ்களை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் மாறுவேட டாஸ்க் கொடுத்திருந்தார்கள். சினிமா பிரபலங்களின் கெட்டப்பில் போட்டியாளர்கள் மாறி அவர்களைப் போல செய்ய வேண்டும் என்று கொடுத்திருந்தார்கள். இதில் போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார்கள். கடந்த வார இறுதியில் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்த மூன்று போட்டியாளர்களை பிக் பாஸ் தேர்வு செய்ய சொல்லி இருந்தார்.
அதில் மைனா, ரக்ஷிதா, அமுதவாணன் ஆகியோர் சிறந்த போட்டியாளர்களாக தேர்வாகியிருந்தனர். இதை தொடர்ந்து கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் ரக்ஷிதா, மணிகண்டன், அசீம், விக்ரமன், ஏடிகே, ஜனனி ஆகியோர் இடம்பெற்றனர். இதில் அதிகமாக ஜனனி,adk, மணிகண்டன் ஆகியோர் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ADK வெளியேறினார் என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து ஜனனி வெளியேறினார். இலங்கையில் இருந்து வந்த இவர் இந்த சீசன் லாஸ்லியாவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் இந்த சீசனில் வேஷ பாட்டிலாக தான் இருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு இளசுகள் மதித்தால் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், போக போக இவர் கேமில் சரியாக கவனம் செலுத்தவில்லை.
அதுமட்டுமல்லாமல் இவர் அமுதவானனுடன் சேர்ந்து குரூப்பீசம் செய்து விளையாடியது தான் இவரது வெளியேற்றத்தற்கு முக்கிய காரணம். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இவர் கலந்துகொண்ட போதும் தற்போதும் இவருக்கு புகைப்படத்த்தை நெட்டிசன்கள் பகிர்ந்து பிக் பாஸுக்கு முன் பிக் பாஸுக்கு பின் ஜனனி எப்படி உடல் எடை கூடிவிட்டார் என்று கூறி வருகின்றனர். ஜனனி பிக் பாஸில் நல்ல சாப்பாடோ என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர்.