அது வேற வாயி, இது நார வாயி – அன்றும் இன்றும் ஜனனி பேசிய வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கேலி.

0
346
janany
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி பேசியிருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 45 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத பல புது நபர்களை போட்டியாளராக களமிறங்கினர்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி:

அந்த வகையில் இலங்கை பெண் ஜனனியும் ஒருவர். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. இதனால் இந்த சீசன் லாஸ்லியா இவர் தான் என்று பலரும் கூறி வந்தனர்.

ஜனனி-அமுதவாணன் :

ஆனால் கடந்த சில வாரங்களாக இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்து வருவது இவரது ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு தள்ளி இருக்கிறது. ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். வேறு யாராவது நெருங்கி பழகினால் கூட அது இவருக்கு பிடிக்காதது போலவே தான் நடந்து கொள்கிறார். அதேபோல் இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார்.

-விளம்பரம்-

ஜனனி குறித்த வீடியோ:

இதனால் வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களும் இது குறித்து கமலிடம் கூறி இருந்தார்கள். மேலும், சாதுவாக இருந்த ஜனனி,குயின்சியின் துண்டு விவகாரத்தில் கையில் இருந்த டீ கப்பை உடைத்து கதறி அழுது இருந்தார். இந்த விஷயத்தை கமல் கூட கண்டித்து இருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜனனி பேசியதற்கும் தற்போது ஜனனி பேசியிருக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரல் ஆகி வருகிறார்கள். அதாவது, இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஐந்தாவது நாளில் தனலட்சுமி- ஜிபி முத்து இடையே சர்ச்சை எழுந்த போது ரீல்ஸ் வீடியோ குறித்து தனம் பேசி இருந்தார்.

ஜனனியை விமர்சிக்கும் ரசிகர்கள்:

அதற்கு கோவம் அடைந்த ஜனனி, பிக் பாஸ் வீட்டில் உள்ள இருப்பவர்கள் எல்லோரும் அக்கா, தங்கை, அண்ணன் போன்ற உறவுகள் உடன் ஒரு குடும்பத்தோடு தான் இருக்க வேண்டும். இது ஒன்னும் ரீல்ஸ் கிடையாது என்று ஜனனி பேசியிருந்தார். இதே 42வது நாளில் அமுதவாணனிடம், இங்கு எல்லோருமே போட்டியாளர்கள் தான். இது ஒன்றும் வீடு கிடையாது. விளையாட தான் வந்திருக்கோம். அவர் அவர்கள் விளையாட்டை அவர்கள் தான் விளையாட வேண்டும் என்று ஜனனி பேசி இருக்கிறார். இப்படி மாறி மாறி ஜனனி பேசியிருக்கும் வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, நீ ஒரு டிராமா குயின்! போலியாக நடிக்காதே என்றெல்லாம் பயங்கரமாக விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement