போன சீசன்ல பட்டதே போது – BB ஜோடியில் இருந்து விலகிய நடுவர், அவருக்கு பதில் வந்த Beast பட பிரபலம்.

0
405
vanitha
- Advertisement -

விரைவில் ஆரம்பிக்க உள்ள பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து முன்னாள் நடுவருக்கு பதிலாக வேறு நடுவர் மாற்றப்பட்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது விஜய் டிவி. ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்ற இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் ஷிவானி -சோம்சேகர், கேப்ரில்லா – ஆஜித், வனிதா -சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் – ஷாரிக், அறந்தாங்கி நிஷா – தாடி பாலாஜி, சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ், பாத்திமாபாபு – மோகன் வைத்தியா, ஜூலி – சென்றாயன் ஆகிய பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-69.png

அதில் ஷிவானி மற்றும் வனிதா தாங்களாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள்.மேலும், பாத்திமா பாபு – மோகன் வைத்தியா மற்றும் ஜூலி – சென்றாயன் ஜோடி எலிமினேட் ஆகிய நிலையில் மீதமுள்ள ஜோடிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்று (செப்டம்பர் 19 ) ஒளிபரப்பானது. இதில் அனிதா – ஷாரிக் ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு முதல் பரிசாக மூன்று லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

- Advertisement -

BB ஜோடிகள் சீசன் 2 :

இப்படி ஒரு நிலையில் BB ஜோடியின் இரண்டாம் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் பிரியங்கா – ராஜு, இசைவாணி – வேல்முருகன், ஐக்கி பெரி – தேவ், சுருதி – அபிஷேக், கணேஷ்கர் – ஆர்த்தி, பாவணி – அமீர், சிவகுமார் – சுஜா வருணி, பார்த்தசாரதி – தாமரை, ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர்.. மேலும், இந்த சீசனில் ராஜு – பிரியங்கா தொகுப்பாளர்களாக களமிறங்கி இருக்கின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 1-650.jpg

நகுலுக்கு பதில் சதிஷ் :

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதிஷ் களமிறங்க இருக்கின்றனர். கடந்த சீசனில் நடுவர்களில் ஒருவராக இருந்த நகுல் இந்த சீசனில் கலந்துகொள்ளவில்லை. கடந்த சீசனில் வனிதா மற்றும் நடுவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இந்த பிரச்சனைக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய நகுல், வனிதாவிற்கு மற்றவர்களுடன் நாங்கள் ஒப்பிட்டது பிடிக்கவில்லை.

-விளம்பரம்-
raju

கடந்த சீசனில் வனிதால் ஏற்பட்ட பிரச்சனை :

நங்கள் மற்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள் அதை வைத்து தான் அவர்களுக்கு கமன்ட் சொன்னோம்.ஆனால், அவர் அதை தவறாக புரிந்துகொண்டார். நாங்கள் மிகவும் தன்மையாக தான் சொன்னோம். ஆனால், வனிதா எங்களை ஒரு அசிங்கமான பெயரை சொல்லி திட்டியுள்ளார் என்று செட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள் ரம்யா மேடம் எவ்ளோ பெரிய ஆளு. அவர்களை இப்படி பேசலாமா. ரம்யா மேம்மிடம் வனிதா மன்னிப்பு கேக்கணும்.

வனிதா தான் காரணமா :

இதெல்லாம் அவருக்கு புதுசு இல்லை. அவங்களை பத்தி நான் பேச கூட விரும்பல. யாரும் சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல. அம்மன் கெட்டப்பில் இருந்து இப்படி பச்சையா பேசி இருக்காங்க என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் கடந்த சீசனில் வனிதாவால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகே நகுல் இந்த சீசனுக்கு வரவில்லை என்று தொன்றுகிறது.

Advertisement