63 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜோவிகாவிற்கு கொடுக்கப்பட்ட மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
605
Jovika
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 63 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாக தான் விளையாடி வந்தார்.

- Advertisement -

நிகழ்ச்சியில் ஜோவிகா:

படிப்பு குறித்து விசித்திராவிடம் சண்டை போட்டது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் மற்றறவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி இருக்கிறார். குறிப்பாக இவர் அர்ச்சனாவை வயது வித்யாசம் பார்க்காமல் வாடி போடி என்று சொன்னதோடு அவரது மன உலைச்சலை கேலி செய்யும் வகையில் மெடிக்கல் ரூம் போ என்று எல்லாம் தரக்குறைவாக பேசி இருந்தார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதே போல டாஸ்க்கில் கூட இவர் சரியாக பங்கேற்பது கிடையாது. இதுவரை இவருக்கு இரண்டு முறை கேப்டன் ஆகும் டாஸ்க்கில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த டாஸ்க்கில் இவர் தோற்றார். மேலும், ஜோவிகா, மாயா டீமுடன் இணைந்து ஆடக் கூடாது என்பதை சூசகமாக சொல்லும் வகையில் வனிதா ‘சிங்கம் சிங்கிளாதா இருக்கும்’ என்று வாசகம் உள்ள டி- ஷர்ட் ஒன்றை அனுப்பி வைத்தார். ஆனாலும், அதையும் புரிந்துகொள்ளாமல் ஜோவிகா, மாயா டீமில் தான் இருந்தார்.

-விளம்பரம்-

ஜோவிகா வெளியேற்றம்:

பின் ஜோவிகா அந்த கேங்கில் இருந்து பிரிந்து வந்த பின்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியம் எதுவும் கொடுக்கவில்லை . அதோடு ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளத்தில் ட்ரோல்களுக்கு அதிகமாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று ஜோவிகா எலிமினேட் ஆகி இருக்கிறார்.

ஜோவிகா சம்பளம்:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல்தான் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 63 நாட்கள் ஜோவிகா இருந்திருக்கிறார், இவருக்கு ஒரு நாளைக்கு 20,000 சம்பளம் என்று கூறப்படுகிறது. ஆக மொத்தம், 20000*63=1260000 கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement