பிக் பாஸுக்கு அப்புறம் இன்னிக்கி வர இந்த 4 பேர் கூட மட்டும் தான் பேசறேன் – ஜூலி பேட்டி. அப்போ அவர் என்னவானார்

0
20843

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ், ஓவியா, ரைசா என்று பல்வேறு நபர்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். அதே போல இந்த சீசன் மூலம் பலரால் வெறுக்கப்ட்டதன் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி.

Bigg Boss Tamil Update: Clashes between Snehan & Sakthi, Vaiyapuri ...

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். ஜூலி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அனைவரையுமே அண்ணா அக்கா என்று உறவு கொண்டாடி வந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சினேகனைத் தான் சொந்த அண்ணன் போல பாவித்து வந்தார் ஜூலி. மேலும் ஆரம்பத்தில் காயத்ரி மற்றும் ஜூலிக்கு இடையே கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டாலும் ஓவியா விஷயத்தில் ஜோடி மற்றும் காயத்ரி சகோதரிகளாக மாறிவிட்டார்கள். இதனால் ஜூலி அடிக்கடி அக்கா என்று காயத்ரியை தான் கூப்பிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜூலி இடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதில் இருந்த யார் யாருடன் நீங்கள் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்கள் என்று இரவீந்திரன் கேட்டிருந்தார்.

வீடியோவில் 6 : 45 மற்றும் 18:06 நிமிடத்தில் பார்க்கவும்

அதற்கு பதிலளித்த ஜூலி பிக் பாஸ் வீட்டில் நான் அண்ணனாக கூப்பிட்டு வந்த சக்தி அண்ணா இன்றும் எனக்கு அண்ணனாக தான் இருந்து வருகிறார். அதேபோல காயத்ரி அக்காவுடன் நான் தொடர்பில் இருந்து வருகிறேன். டான் காஜல் மற்றும் சுஜா வருணி போன்றவர்களிடம் நான் தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த நாலு பேரை தவிர வேறு யாரிடமும் நான் தொடர்பில்லை என்று கூறியிருந்தார். அதேபோல சினேகன் பற்றி சொல்லுங்கள் என்று ரவீந்திரன் கேட்டதற்கு, குலுங்கி குலுங்கி சிரித்த ஜூலி அவரைப் பற்றி என்ன சொல்வது. சொல்வதற்கு அத்தனை விஷயம் இருக்கிறது இது மிகவும் கடினமான கேள்வி என்று கூறிவிட்டார்

-விளம்பரம்-
Advertisement