முதல் சீசன்ல அப்படி நெனச்சி போய் தான் கோட்டவிட்டேன், அதனால இந்த சீசன்ல – ஜூலியின் பேச்சால் Troll செய்ய துவங்கிய நெட்டிசன்கள்.

0
416
- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனத்தாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன்.

- Advertisement -

காதலன் சர்ச்சை :

இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை. இறுதியாக ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். சமீபத்தில் கூட ஜூலி, தன் காதலன் தன்னை டார்ச்சர் செய்வதாக போலீசில் புகார் அளித்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பிக் பாஸ் அல்டிமேட்டில் ஜூலி :

இப்படி ஒரு நிலையில் ஜூலி மீண்டும் பிக் பாஸில் கலந்துகொள்ள இருக்கிறார். பிக் பாஸ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள். தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

இப்போதே கேலி செய்ய துவங்கிய நெட்டிசன்கள் :

இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவில் இந்நிகழ்ச்சி குறித்து கமலஹாசன் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சி இன்று துவங்க இருக்கிறது, இதில் ஜூலி கலந்துகொள்ள இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போதே பலரும் கேலி செய்ய துவங்கி இருந்தனர்.

julie

Club Houseல் பேசிய ஜூலி :

இப்படி ஒரு நிலையில் நடிகை ஜூலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் கிளப் ஹவுஸ் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய ஜூலி, பிக் பாஸ் வீட்டில் யார் எப்படி செய்கிறார்களோ அதை பொறுத்து தான் என் ரியாக்ஷன் இருக்கும். என் சீசனையும் சேர்த்து எந்த பிக் பாஸ் சீசனையும் பார்க்கவில்லை. நடந்து நடந்து போச்சி,என் கடந்த காலத்தை பற்றி நான் நினைக்க மாட்டேன். அதை மாற்றவே முடியாது என்றும் கூறியுள்ளார். ஜூலியின் இந்த பேச்சை தற்போது பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement