ஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் இரண்டாவது ட்ரைலர்.!

0
1640
Julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், பார்வையாளர்கள் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர்.

ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகக் களமிறங்கினார். பின்னர், ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றினார். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மன் தாயி படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : விஷ்ணு விஷால் பிறந்தநாள்.! கண்ணத்தில் முத்தமிட்டு வாழ்த்து சொன்ன வீராங்கனை.! 

அம்மன் தாயி படத்திற்காக ஜூலி விரதமெல்லாம் இருந்து தான் அம்மன் வேடத்தில் நடித்தார் என்றும் கூறப்பட்ட்து. இவர் நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியாகி சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பறை வந்தது.

மேலும், இந்த படத்தின் ட்ரைலரை கண்டு பலரும் ஜூலியை படு பங்கமாக கலாய்த்தனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனையும் ரசிகர்கள் விட்டு வைப்பார்களா என்ன.