பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டு பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள்,டிவி ஷோக்கள் என்று பல வைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "ஓடி விளையாடு பாப்பா" என்ற குழந்தைகள் நடன நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் ஜூலியின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.அம்மன் தாயி என்ற படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகின. இந்த படத்தில் அவருக்கு இரட்டை வேடம் எனவும் சொல்லப்படுகிறது.அந்த புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.




