விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இவர் முதல் சீசனில் சினிமா பற்றி எந்த ஒரு தெளிவும் இல்லாமல் கலந்து கொண்டவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும் பல விமர்சனங்களை சந்தித்து இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக் கொண்டார் ஜூலி.

அதற்கு காரணம், இவர் பிக் பாஸ் முதல் சீசனில் வீட்டுக்குள் நடந்த கலவரத்தால் மாத்தி மாத்தி பொய் பேசி இருந்தது தான். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். இருந்தாலும் ஜூலி குறித்து பலரும் பயங்கரமாக திட்டி மீம்ஸ் போட்டு கலாய்த்து இருந்தார்கள். ஆனால், ஜூலி மனம் தளராமல் தைரியமாக பல மேடைகளில் கலந்துகொண்டு பேசினார்.
ஜூலி குறித்த தகவல்:
பின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருடைய இமேஜை அப்படியே சுக்குநூறாக உடைத்து தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்து இருந்தார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி சில நிகழ்ச்சிகளுக்கு கலந்துகொண்டார். அதே போல சீரியலில் ஜூலி நடித்து இருந்தார். அது போக, ஜூலி சொந்தமாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஜூலி சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார்.

ஜூலியின் நிச்சயதார்த்தம்:
தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்கள் என அனைத்துமே பகிர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, ஜூலி தான் காதலித்து வந்த நபரை தான் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார். மாப்பிளை யார் என்ற விவரம் தெரியவில்லை இவருடைய நிச்சயதார்த்த நிகழ்வில் குடும்ப உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து பலருமே ஜூலிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், திருமணம் எப்போது என்று தெரியவில்லை.
https://www.youtube.com/shorts/veHFJuXWJZM?app=desktop
ஜூலியின் வருங்கால கணவர்:
இப்படி இருக்கும் நிலையில் ஜூலியின் வருங்கால கணவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய பெயர் முகமது. ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வருகிறார். விளம்பர படங்களுமே எடுக்கிறார். கடந்த சில வருடங்களாக ஜூலிக்கும் முகமதுக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. அதற்கு பிறகு தான் அவர்களுக்கிடையில் காதல் வளர்ந்தது. தற்போது இவர்களுடைய காதல் கல்யாணத்தில் முடியப்போகிறது. இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஜூலியின் வருங்கால கணவர் முகமது, கல்யாணம் குறித்து எல்லாருக்குமே சீக்கிரமாக நாங்கள் ரெண்டு பேரும் சொல்லுவோம். இப்போது சூட்டிங் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






