ஜூலியின் காதலன் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம் – அறிவுரை கூறி அனுப்பி அனுப்பி வைத்த போலீசார்.

0
240
julie
- Advertisement -

நான்கு வருடங்கள் காதலித்து தன்னுடைய காதலர் மீது வைத்துள்ள ஜூலி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “வீர தமிழச்சி” என்ற  நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் என்ன செய்தாலும் இவரை கலாய்ப்பதற்கேன்றே ஒரு கூட்டம் சமூக வலைத்தளத்தில் உருவானது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image_750x_61aafdfc2b10b.jpg

இருப்பினும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் இப்படி ஒரு நிலையில் நான்கு வருடங்கள் காதலித்த தன்னுடைய காதலர் மீது ஜூலி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அமைந்தகரை அய்யாவூ காலனி பகுதியை சேர்ந்த ‘மனிஷ்’என்ற 26 வயதுடைய நபர் அண்ணாநகரில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வருவதாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அவர் மீது காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்ததாகவும் ஜூலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தன்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து தன்னிடம் இருந்து இருசக்கர வாகனம், 16 கிராம் தங்க செயின், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பலவற்றை மனிஷ் வாங்கியுள்ளார் என்றும் எது வரை அவருக்காக 2.30 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் ஜூலி தன்னுடைய புகாரில் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட மனிஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

This image has an empty alt attribute; its file name is 1-29.jpg

விசாரணையில் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது கேரளாவை பூர்வீகமாக கொண்ட மனிஷ் என்பவர் ஜூலிக்கு ஆறுதல் கூற பின்னர் ஜூலிக்கும் மனிஷூக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் நட்பாக பழக மனீஷ் உடனான காதலை துண்டித்து அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலிக்கு கால் செய்து தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் எனவும்  அவர் இல்லாமல் தன்னால்  வாழ இயலாது எனவும் கூறி அழுது அடிக்கடி கால் செய்து வந்ததாகவும் தெரியவருகிறது.

-விளம்பரம்-

இதனால் மனிஷை மிரட்டுவதற்காக ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்துள்ளார்.மேலும் ஜூலியும் மனிஷும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போலீசார் அழித்துவிட்டு ஜூலி மற்றும் மனிஷ் ஆகிய இருவருக்கும் அறிவுரைக்கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கொடுக்கப்பட்ட புகாரில் ஜூலியே காதலை துண்டித்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement