பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நான்காம் வாரத்தை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி தமிழில் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி மக்களின் இருந்தார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:
இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் மூன்றாம் வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு களமிறங்கி இருக்கிறார். மேலும், வனிதா தாமாகவே வெளியேறிவிட்டதால் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கூறப்பட்டது.
நிரூப்பை ஆவேசமாக திட்டும் ஜூலி:
இந்தநிலையில் ஜூலி நிரூப்பை ஆவேசமாக திட்டும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நிகழ்ச்சியில் ஜூலி, நிரூப்பை பார்த்து என் கேரக்டர் பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸ்ஸும் கிடையாது, வாயெல்லாம் ஒடச்சி கைல கொடுத்துடுவேன் என்று சொல்கிறார். உடனே நிரூப், எனக்கு பஞ்ச் பண்ண விருப்பம் இல்லை என்று அமைதியாக இருக்கிறார். இப்படி இவர்கள் பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பே வனிதா, நிரூப்பை பயங்கரமாக திட்டி இருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் நிரூப் :
அப்போதும் நிரூப் எதுவுமே பேசவில்லை, அமைதியாகத்தான் இருந்தார். தற்போது ஜூலி பேசும் போதும் நிரூப் பெரிதாக சண்டை போடாமல் அமைதியாக இருக்கிறார். ஆனால், இது நிரூப் உடைய குணமே இல்லை. நிரூப் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருக்கும் போது பயங்கரமாக எல்லோரிடமும் சண்டை போட்டிருந்தார். குறிப்பாக அவருடைய தோழி பிரியங்காவிடம் கலவரமே நடத்தி இருந்தார். இப்படி இருக்கும் நிரூப் அல்டிமேட் நிகழ்ச்சியில் கவனமாக விளையாடுகிறாரோ? என்ற சந்தேகம் வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஜூலியும் அபிராமியும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.
வைரலாகும் ஜூலி- நிரூப் வீடியோ:
அபிராமிக்கு யாரு எல்லாம் பிடிக்கவில்லையோ, ஜூலி அவர்களிடம் பேசுவது கிடையாது. அதே போல் நாமினேஷனில் கூட அபிராமி யாரை நாமினேட் செய்தாரோ, ஜூலியும் அவர்களே தான் செய்திருந்தார். குறிப்பாக அபிராமி நிரூப்பை நாமினேட் பண்ணி இருந்தார். ஜூலியும் எனக்கு நிரூப்பை சுத்தமாகவே பிடிக்கவில்லை என்று நாமினேட் செய்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஜூலி, நிரூப்பை ஆவேசமாக திட்டி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நிரூப் கேம் விளையாடுகிறாரா? அவர் இப்படி இருக்கவே மாட்டாரே? இது அவருடைய குணமே இல்லையே என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.