இளம் இயக்குனர்களுக்கு உதவ ஜூலி செய்த விஷயம்.! முதன் முறையாக பாராட்டும் நெட்டிசன்கள்.!

0
2696
julie
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் ஜூலி. இவர்கள் தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர பெண்மணியாகத் திகழ்ந்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை காமெடி பீசாக மாற்றிவிட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரின் செயல்கள் மூலம் மக்களிடையே வெறுப்பையும், கோபத்தையும் பெற்றுவந்தார். மேலும், இவரை ” புளுகு மூட்டை” என்று கூட திட்டி வந்தார்கள் நெட்டிசன்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜூலி எங்கு சென்றாலும், எந்த மேடையில் பேசினாலும் ‘ஓவியா ஓவியா’ என்று கத்தி அவரைப் பேசவிடாமல் மேடையை விட்டு இறக்கி விடுவார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல், ஜூலி எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அவரை கிண்டலும், கேலியும் செய்வதுதான் நெட்டிசன்கள் முழு வேலையாக வைத்திருந்தார்கள். இதனாலே அவர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை,பதிவுகளை போடுவதை நிறுத்தி விட்டார். ஆனால், தற்போது ஜூலியை முதல் முறையாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்ற விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த உடன் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றார்.

இதையும் பாருங்க : வெளியேறிய அடுத்த நாளே தர்ஷனுக்கு சினிமா வாய்ப்பு.! தயாரிப்பு நிறுவனம் போட்ட ட்வீட்.!

- Advertisement -

அதனைத்தொடர்ந்து,அவர் அம்மன் தாயி, டாக்டர் அனிதா எம்பிபிஎஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால், எந்த படமும் இன்னும் திரையுலகிற்கு வரவில்லை. அதுமட்டுமில்லாமல், ஜூலி’ டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்’ படத்தில் நடிப்பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூலி அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதில் அவர் கூறியது, ஒவ்வொரு படமும் நம் வாழ்வின் பிரதி. ஒரு சிறிய, முன் முயற்சியாக வலுவான கதைகளுடன் இயக்க துடிக்கும் சகோதர சகோதரிகள் வரவேற்கப்படுகிறார்கள்.

Image

அவர்களுக்கு உதவ நான் இலவசமாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்.மேலும், என்னை ட்விட்டரில் தொடர்பு கொள்ளவும் என பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஒட்டி ஜூலிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகை காஜல் பசுபதி ஜூலியின் இந்த புதிய முயற்சியை குறித்து சூப்பர் பேபி என்று பாராட்டியுள்ளார். வழக்கமாக ஜூலியை கலாய்த்து தான் பதிவிட்டு விடுவார்கள். ஆனால், இதன் மூலம் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் “நாளைய சிறந்த இயக்குனர்கள்” நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் குறும்படங்களில் ஜூலி அவர்கள் நடிக்க முன்வந்துள்ளார். இதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

-விளம்பரம்-

மேலும், ஜுலி ஜல்லிக்கட்டில் பேசிய வார்த்தைகள் எல்லாம் தமிழக பெண்மணிகளை மெருகேற்றும் வகையில் இருந்தது . ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி அவருடைய குணத்தை மாற்றி விட்டார்கள்.அவர் தயவு செய்து இனிமேலாவது நாளை இயக்குனர்களுக்கு வஞ்சமில்லா தன்மையுடன் உதவுங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement