வெளியேறிய அடுத்த நாளே தர்ஷனுக்கு சினிமா வாய்ப்பு.! தயாரிப்பு நிறுவனம் போட்ட ட்வீட்.!

0
19877
tharshan
- Advertisement -

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.அதிலும் , நேற்று நடந்த எலிமினேஷனில் தர்சன் அவர்கள் வெளியேற்றப்பட்டார்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். முடிவாக கமல்ஹாசன் அவர்கள் இது மக்கள் ஓட்டின் மூலம் வந்த முடிவு என்று சொல்லிவிட்டார்.

-விளம்பரம்-

ஆனால், என்ன? நடந்தது என்று ஒன்றும் புரியாத அளவிற்கு மக்கள் உள்ளனர்.பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியே சென்றதைத் தொடர்ந்து 5 போட்டியாளர்கள் மட்டும் இருந்தார்கள். மேலும், கவின் சென்றுவிட்டார் யாரும் வெளியே போக மாட்டார்கள் என்று பலரும் நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால்,கமல்ஹாசன் அவர்கள் எவிக்ஷன் இல்லை என்று நினைப்பது தவறு என்று கூறினார்.இந்நிலையில் தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம்.

இதையும் பாருங்க : கடற்கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ஆதலால் காதல் செய்வீர் பட நடிகை.!

- Advertisement -

ஆனால் திடீரென்று தர்சன் எலிமினேட் செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதனைத்தொடர்ந்து , வாக்குகள் அடிப்படையில் தான் தர்ஷன் வெளியேற்றப்படுகிறார் என்று அவர் கூறினார்.மேலும்,பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தர்சனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. மேலும், அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார் போல கவினை வைத்து “நட்புன்னா என்னன்னு தெரியுமா” படத்தை தயாரித்த ‘லிப்ரா புரொடக்ஷன்’ தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளது.

-விளம்பரம்-

அதில் , தர்ஷன் இறுதியாக உங்களின் கேம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், கோலிவுட்டில் உங்களுடைய கேம் துவங்க இருக்கிறது. லிப்ரா புரொடக்ஷன் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் மூலம் தர்சன் ரசிகர்கள் பெரும் உற்சாகத்திலும்,ஆர்ப்பாட்டத்தில் உள்ளனர்.மேலும், இது குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனஎதிர் பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தாலே அனைவரின் வாழ்க்கையும் செட்டில் தானே என்று ரசிகர்கள்தெரிவித்து வருகின்றனர் . மேலும், தர்சனுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் தர்ஷன் ரசிகர்கள். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தர்ஷனின் வாழ்க்கையே மாறிவிடும் என்றும்,தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement