இதனால் தான் பரணி காலில் விழுந்தேன் – மூன்று ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ஜூலி.

0
79127
julie
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ், ஓவியா, ரைசா என்று பல்வேறு நபர்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் பிரபலமடைந்தனர். அதே போல இந்த சீசன் மூலம் பலரால் வெறுக்கப்ட்டதன் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி.

-விளம்பரம்-

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். இதே சீசனில் பங்குபெற்ற பரணி பிரச்சனை தாங்கமுடியாமல் வெளியேறிய போது பரணியை அண்ணன் என்று சொந்தம் கொண்டாடிய ஜூலி கூட ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால், அதன் பின்னர் பரணி காலில் ஜூலி நடு ரோட்டில் காலில் விழுந்த விடியோக்கள் அப்போது சமூக வலைதளத்தில் வைரலானது.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜூலி, இதுகுறித்து பேசுகையில் உண்மையில் எனக்கு அவ்வளவு குற்ற உணர்ச்சியாக இருந்தது. காரணம், அவர் வெளியில் போன அன்று நான் ஒரு தங்கச்சியாக நடந்துக்கவில்லையோ என்று. மேலும், நான் நாளை தான் வெளியில் போக போகிறேன் என்று சொல்லி விட்டார்கள். ஆனால், அவர் அன்று அவரது சொந்த ஊருக்கு போகிறார். எனக்கு என்னுடைய குற்ற உணர்ச்சி போக வேண்டும் அவ்வளவு தான். அதனால் தான் நான் காலில் விழுந்தேன்.

நான் அவர் காலில் பின்பு, நான் செஞ்சது தப்போ என்று எண்ணம் தோன்றியது. ஆனால், அதன் பின்னர் அவர் எதுவுமே பேசவில்லை. நான் அவருடைய நம்பருக்கு கால் செய்தேன். அவர் நம்பரை மாற்றிவிட்டார் என்று சொன்னார்கள். அதன் பின்னர் அவரிடம் பேசவே இல்லை. நான் வெளியில் வந்த பின்னர் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்ப்பது இல்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement