ஜூலிக்கு நடந்த அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் இருந்து அவரே வெளியிட்ட புகைப்படம் – என்ன பிரச்சனை தெரியுமா ?

0
584
julie
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-31.png

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இருப்பினும் இவர் மீதான வெறுப்பு சற்றும் குறையவில்லை.

- Advertisement -

அல்டிமேட் மூலம் பெயரை மாற்றிய ஜூலி :

இப்படி ஒரு நிலையில் தான் ஜூலி சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தன் பெயரை சரி செய்துகொள்ளவும் உண்மையில் தான் யார் என்பதை மக்களுக்கு எடுத்துகாட்டவும் தான் பிக் பாஸுக்கு வந்ததாக சொன்னார் ஜூலி. அதே போல பிக் பாஸ் அல்டிமேட் மூலம் தன்னுடைய நேர்மையான முகத்தை காட்டி மக்களின் மனதை கவர்ந்து இறுதி வாரம் வரை வந்தார்.

ஜூலி வெளியேற்றத்தால் ரசிகர்கள் அதிருப்தி :

ஜூலி கண்டிப்பாக டாப் 3 இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து இருந்தது. இருப்பினும் ஜூலி தான் உண்மையான வெற்றியாளர் என்று ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் ஜூலி சமீபத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்கை கொடுத்து இருந்தது.

-விளம்பரம்-

ஜூலிக்கு நடந்த அறுவை சிகிச்சை :

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜூலி, தனது Lasic Surgery வெற்றிகரமாக முடிந்தது என்றும் அதுபற்றி விசாரித்த ரசிகர்களுக்கும் எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி என மருத்துவமனையில் நோயாளி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது ஷேர் செய்து ரசிகர்களை பதற வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு என்ன ஆச்சு? என்றும் சீக்கிரம் குணமாகி வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Lasic Surgery என்றால் என்ன :

கண் பார்வை பிரச்சனைக்கு செய்யப்படும் லேசர் அறுவை சிகிச்சை தான் LASIC. (Laser-Assisted In Situ Keratomilensis) என்பதன் சுருக்கம் தான் LASIC. கண்ணாடி மற்றும் லென்ஸ் போட்டுக் கொள்ளாமல் பார்வை கோளாறு பிரச்சனையை இதன் மூலம் சரி செய்துக் கொள்ள முடியும். தற்போது அந்த சிகிச்சையைத் தான் ஜூலி செய்துள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. ஏற்கனவே ரம்யா பாண்டியன் இதே சிகிச்சையை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement