ப்ரேமம் மலர் டீச்சர் பாடளுக்கு நடித்து இந்த வருடத்தில் ஜூலி போட்ட முதல் ட்வீட். கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
87070
julie
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெயர் ஆதரவை பெற்றது. ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசன் எதிரி என்றால் முதல் சீசனில் தான் கூறுவார்கள். இந்த சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு நபர்கள் கவனம் அடைந்தார்கள். ஆனால், முதல் சீசனில் மிகவும் வெறுக்கப்பட்ட நபராக இருந்து வந்தவர் ஜல்லிக்கட்டு ஜூலி தான் .தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி.

-விளம்பரம்-

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு பின்னர் இவரது நல்ல பெயர் அனைத்தும் அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹீட்டர்ஸ்கள் உருவாகிறார்கள். இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் இவரை சமூகவலைதளத்தில் வறுத்து எடுத்து வந்தனர் . ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி. மேலும், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிவருகிறார் ஜூலி. இறுதியாக இவரது விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் நடித்திருந்தார் ஜூலி.

இதையும் பாருங்க : டிடியின் சகோதரி ப்ரியதர்ஷினியை பார்த்திருப்பீங்க, டிடியின் தம்பியை பார்த்துள்ளீர்களா.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் களுக்கு உள்ளனார் ஜிலி. ஆனால், சமீபகாலமாக சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்டு வந்த பதிவுகளுக்கு நல்ல கமெண்ட்ஸ் வந்து கொண்டுதான் இருந்தது இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் தான். இந்த சீசனில் பங்குபெற்ற ஒரு சில போட்டியாளர்களை விட ஜூலி எவ்வளவோ மேல் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். ஆனால், சமீபத்தில் ஜூலி பதிவிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஜூலியை மீண்டும் கழுவி ஊற்றி வருகிறார்கள். சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் ஜூலி.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் மலையாளத்தில் வெளியாகி அடைந்த பிரேமம் படத்தின் பாடலும் இடம் பெற்று இருந்தது. பிரேமம் படத்தில் நிவின் பாலியை விட ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது சாய் பல்லவி நடித்த மலர் டீச்சரின் கதாபாத்திரம் தான். அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மலரே என்ற பாடல் மலையாளத்தில் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட் அடைந்தது. இந்த நிலையில் இதே ‘மலரே’ பாடலை போட்டு ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் பொறுக்க முடியாமல் ஜூலியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisement