சந்தோஷ் நாராயணன் மகளும் பிரபல பாடகியுமான தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் வெளியான 3 வாரங்களில் யூ-ட்யூபில் 76 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் பிரபலம் ஜூலியும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.சமீப காலமாக மற்ற பிக் பாஸ் நடிகைகளின் அக்கப்போரை பார்த்துவிட்டு. இவர்களுக்கு எல்லாம் ஜூலி எவ்வளவோ தேவையில்லை என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் சமீப நாட்களாக ஜூலிக்கு ஓரளாவிற்கு சமூக வலைத்தளத்தில் ஹேட்டர்ஸ்களின் சதவீதம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு காட்டு வாசி போல வேடமிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜூலி.