பிக் பாஸ் அடுத்து டீவி ஷோ,படங்கள் என்று படு பிஸி ஆகிவிட்டார் ஜூலி. சமீபத்தில் கூட இவருக்கு தேசி அவர்ஸ் என்னும் நிகழ்ச்சியில் விருதுகள் கூட வழங்கப்பட்டது.
தற்போது எங்கு சென்றாலும் ஜூலியின் அட்டுழியங்கள் தங்க முடியவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.கலைஞர் டீவியில் ஒளிபரப்பாகி கொண்டடிருக்கும் ஓடி விளையாடு பாபாவின் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் ஜூலி.அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளை வீட இவர் தான் அதிகம் அட்டகசங்களை செய்து வருகிறார் என்று பலரும் வெறுபடிகின்றனர்.அந்த நிகழ்ச்சியில் நடனம் ,பாடல் என்று இவர் செய்யும் காமெடியை பலரும் கலாய்த்து வருகின்றனர்.சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் நான் போகிறேன் மேலே மேலே என்ற பாடலை ஜூலி பாடியுள்ளார்.அந்த பாடலை பாடிய ஜூலியை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஒரு புறம் உங்களுக்கு தான் பாட வராதே பின்பு ஏன் நான் போகிறேன் மேலே மேலே என்று எங்களையும் மேல அனுப்புகிறீர்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.மற்றொரு புறம் வழக்கம் போல ஜூலியின் ரசிகர்கள் அவர் பாடிய பாடலுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.