புத்தாண்டு வாழ்த்து கூறி ஜூலி போட்ட புகைப்படம்.! வறுத்தெடுத்த வலைதள வாசிகள்.!

0
1105
Julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், அதன் பின்னர் அனைவரும் ஜூலியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர்.

ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகக் களமிறங்கினார். பின்னர், ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றினார். அதை  தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மன் தாயி படத்தில் நடித்து வருகிறார். 

ஏற்கனவே இவர் நடித்துள்ள அம்மன் தாயி, உத்தமி, அனிதா எம் பி பி எஸ் போன்ற படங்களில் நடித்து வந்தார் ஜூலி. இதில் சமீபத்தில் வெளியான ‘அம்மன் தாயி’ படத்தின் ட்ரைலரை பார்த்து அனைவரும் மரண கலாய் கலாய்த்தனர். தற்போது அனிதா எம் பி பி எஸ் படமும் பிரச்சனையில் உள்ளது. 

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்தார். இந்த பதிவை பார்த்த பலரும் ஜூலியை பயங்கரமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த ட்ரெஸ்ஸை எல்லாம் திருடிட்டு வந்துட்டயா என்று கலாய்த்து வருகின்றனர்.