எனக்கு இந்த பிக் பாஸ் ஜோடியுடன் தான் நடிக்க வேண்டும்.! ஜூலியின் ஆசை .!

0
595
Julie

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் நல்ல பெயர் எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பெயரை நாறடித்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் என்ன செய்தாலும் அது கேலி கிண்டலுக்கு உள்ளாகி வந்தது. ஆனால், அதை எதை பற்றியும் கவலை படாமல் இருந்த ஜூலி டிவி நிகழ்ச்சிகள் தொடங்கி சினிமா வரை சென்று விட்டார்.

விமல் நடிப்பில் வெளியான ‘மன்னர் வகைரா’ படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த ஜூலி அதன் பின்னர் உத்தமி, அம்மன் தாயி, அனிதா எம் பி பி எஸ் போன்ற பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் ஜூலியின் நண்பர் மார்க்குடன் கூட ஒரு புதிய படத்தின் கமிட் ஆகியிருந்தார்.

இதையும் படியுங்க : மரண கலாய்க்கு உள்ளான ஜூலியின் #10yearschallenge.!என்ன கொடுமை இது ஜூலி.! 

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜூலி தனது வருங்கால படங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் நான் நடித்த அம்மன் தாயி படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதே போல அனிதா எம் பி பி எஸ் படம் இப்போதைக்கு கொஞ்சம் பிரச்சனையில் இருக்கு அதனால அதபத்தி பேச வேண்டாம் என்றார்.

மேலும், பிக் பாஸ் நடிகர்களில் யாருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது என்ற கேள்விக்கு ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு எல்லாரையும் பிடிக்கும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ எனக்கு ரொம்ப புடிச்சது. ஆன அரவ்வுடன் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை என்று சிரித்துகொண்டே கூறினார் ஜூலி. ரொம்ப ஆச தான் ஜூலி.

-விளம்பரம்-
Advertisement