விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறிஇருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.
Virtue won in the hearts of the people… ❤❤💗💗 @RVikraman#BiggBossTamil6#AramVellum
— selvaa (@Selvaa6730) January 23, 2023
#Vikraman#ThozharVikraman#BoycottVijayTv#அறம்வெல்லும் pic.twitter.com/23aj5L42BK
மேலும், இந்த சீஸனின் முதல் பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்ட போது கதிரவன் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றிக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர்.
இரண்டு முறை வந்த பணப்பெட்டி :
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இரண்டாம் முறையாக பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுஇருந்தது. அந்த பெட்டியை எடுத்துக்கொண்ட அமுதவாணன் 11.75000 லட்சத்துடன் வெளியேறினார். இதை தொடர்ந்து அசீம், விக்ரமன், மைனா, சிவின் ஆகிய நான்கு பேர் மட்டும் இறுதிப் போட்டி நோக்கி காத்துக்கொண்டிருந்த நிலையில் இந்த சீஸனின் கடைசி ஏவிக்ஷனில் மைனா வெளியேறினார்.
பட்டத்தை வென்ற அசீம் :
இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகிஇருந்தனர். ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார். இவரை தொடர்ந்து விக்ரமன் இரண்டாம் இடமும் ஷிவினுக்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டது. முதல் இடத்தை பிடித்த அஸீமிற்கு 5000000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
ரசிகர்கள் அதிருப்தி :
இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான்.. இதனால் இவரை வெளியேற்ற வேண்டும் அடிக்கடி ட்விட்டரில் RedCardAzeem என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர் ரசிகர்கள். மேலும், அசீம் வென்றால் அது தவறான உதாரணமான இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர்.
காஜல் போட்ட பதிவு :
அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜல் ‘ஏய் எப்புட்றா’ என்ற templeteஐ பகிர்ந்து ‘எங்கேயுமே உண்மையான நாகரீகமான நல்லவங்களா, நேர்மையா இருந்தா ஜெயிக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் அணித்தனமாக நிரூபிக்கும் சமூகம்’ என்று பதிவிட்டுள்ளார்.