தன் முன்னாள் மனைவியின் ஆடை குறித்து பேசிய அசீம் குறித்த பதிவை பகிர்ந்த பிக் பாஸ் காஜல் பசுபதி.

0
977
azeem
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அஸீம் தனது மனைவியின் ஆடை குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது பாதி கட்டத்தை தாண்டி இருக்கிறது.இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-
azeem

வழக்கம்போல இந்த சீசனிலும் ஏகப்பட்ட விஜய் டிவி விவரங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமடைந்த அசியமும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த சீசனில் அசீம் தான் ஆரம்பம் முதலே மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து மற்ற போட்டியாளர்களிடம் அவதூறாக பேசுவது, வம்பு இழுப்பது, ஆக்ரோஷமாக விளையாடுவது என்று தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

அசீம் விவாகரத்து :

இதனை கமல் கூட பலமுறை எச்சரித்து இருக்கிறார்.ஆனால் அதே புறம் பிக் பாஸ் வீட்டில் அசீம் தான் உண்மையாக விளையாடுகிறார் என்றும் அவருக்கு ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது அஸீமிற்கு திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு தனது மனைவியை பிரிவதாக அறிவித்து இருந்தார் அசீம், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார் அசீம்.

ஷிவானியுடன் ஏற்பட்ட கிசுகிசு :

அதில் ‘அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்க சட்டப்படி பிரிஞ்சிட்டோம். பரஸ்பரம் ஒப்புக்கொண்டு இந்த விவாகரத்து கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் பேச நான் விரும்பவில்லை என்றும் கூறி இருந்தார். மேலும், அசீமிற்கும் பகல் நிலவு சீரியலில் அஸீமுடன் நடித்த ஷிவானிக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதனால் தான் அசீம் விவாகரத்து செய்ததாகவும் தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

மனைவியின் ஆடை குறித்து பேசிய அசீம் :

அதே போல கடந்த சீசனில் ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். அப்போது அசீம் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அசீம் கலந்துகொண்டால் என் மகளை வெளியில் அனுப்பிவிடுங்கள் என்று ஷிவானி அம்மா பிக் பாஸ் குழுவுடன் பிரச்சனை செய்ததால் அசீம் அந்த சீசனில் கலந்துகொள்ளவில்லை. இப்படி இருக்க அசீம் தனது மனைவி குறித்து பிக் பாஸில் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் ‘ ‘ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் இப்படி (மாடர்ன்) ட்ரெஸ் பண்ணலாமா, ஆனால், அவள் அப்படி தான் ட்ரெஸ் அணிவால். ஒரு நிகழ்ச்சிக்கு போனால் நான் ஏன் ஸ்கர்ட் போட்டு வரக்கூடாது என்று கேட்பாள்’இதை கேட்கப்போய் தான் எங்களுக்குள் முதல் சண்டை வந்தது. முதல் வாக்குவாதமே ட்ரெஸ்காக தான் வந்தது’ என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

காஜல் பகிர்ந்த பதிவு :

அதில் ‘விக்ரமன்கேள்வி கேட்டாலே காண்டுகுறான்..

தன் மனைவியின் Dress code பிடிக்கலைனு சன்டை போட்டு Divorce வாங்கிய அசீம்.

ரொம்பவே கஷ்டம் டா யப்பா

தட் மூணு பேரு மைண்ட் வாய்ஸ்

‘ என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவை முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement