ரெஜிஸ்டர் கல்யாணம், பிரிவிற்கு காரணம், குழந்தை தத்தெடுப்பு. மனம் திறந்த காஜல்.

0
146077
kajal-pasupathi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சின் மூன்றாவது சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டி நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் அவரை திருமணமும் செய்து கொண்டார். சாண்டிக்கும் காஜலுக்கு திருமணத்திற்கு பின்னர் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் சமீபத்தில் ஊடகத்தில் செய்திகள் பரவியது.

-விளம்பரம்-

இதுகுறித்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் காஜலிடம் கேட்டுள்ள போது, எனக்கு எந்த குழந்தையும் இல்லை, அதை நான் தவறவிட்டு விட்டேன். இதை பற்றி நான் பல முறை அவரிடம் சொனேன். தற்போது வரை அதை நினைத்து நான் வருத்தப்பட்டு வருகிறேன். இந்த நிலையில் ஒரு குழந்தயை தத்தெடுக்க போவதாக காஜல் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும், குழந்தையை தத்தெடுக்க பிரபல நடன இயக்குனரிடம் உதவி கேட்டிருந்தார் சாண்டி. இந்த நிலையில் பிரபல பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ள காஜல், குழந்தை தத்தெடுப்பு குறித்தும் சாண்டியுடனான உறவு குறித்தும் பேசியுள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு பின் கவினை நினைத்து கண் கலங்கிய லாஸ்லியா. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அந்த பேட்டியில் பேசியுள்ள காஜல், குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட வருட ஆசை. அதற்கு என்னுடைய அம்மாவும் சம்மதித்து விட்டார்கள். ஒரு தனி பெண்ணாக ஒரு குழந்தையை வளர்க்க முடியாது அதற்கு மாதம் மாதம் நிலையான வருமானம் வேண்டும். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கான சட்டங்கள் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதனால் ராகவா லாரன்ஸ் இடம் உதவி கேட்டு அந்த பதிவைப் போட்டேன். ஆனால், இன்னும் அதனை அவர் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், சாண்டியும் அவரது மனைவியும் பார்த்துவிட்டு எனக்கு தொலைபேசியில் போன் செய்து குழந்தை தத்தெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று சொன்னார்கள் என்று கூறியுள்ளார் காஜல்.

Image result for kaajal pasupathi with sandy family"

மேலும், சாண்டியுடன் தற்போது இருக்கும் உறவு குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளித்த காஜல், சாண்டி நல்ல தோழன் மட்டும் கிடையாது அவன் ஒரு நல்ல மனிதரும் கூட. நாங்கள் இருவரும் உண்மையாக காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஆனால், எங்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் அதை மறைத்து விட்டோம். இதனால் பலரும் நாங்கள் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்வதாக சொன்னார்கள். நானும் சாண்டியும் பிரிந்ததற்கு அவன் காரணம் கிடையாது. நான் தான் அதற்கு காரணம். நான் எதிலும் மிகவும் போசஸிவாக இருப்பேன். சொல்லப்போனால் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் கீதா கதாபாத்திரம் போலத்தான். நானும் என்னுடைய அதிகப்படியான பாசத்தால் சாண்டியை மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். ஒருகட்டத்தில் எங்களுக்குள் சண்டை அதிகரித்ததால் இருவரும் பிரிந்து விட்டோம்.

-விளம்பரம்-
Image result for kaajal pasupathi with sandy family"

நான் செய்ததை சாண்டி எனக்கு செய்திருந்தால் ‘என்னை சந்தேகப் படுகிறான்’ என்று பிரிந்து இருப்பேன். ஆனால், தற்போது அவரது மனைவி மிகவும் மெட்சுராக இருந்து வருகிறார். சாண்டியின் வேலை தன்மையை உணர்ந்து அழகாக நடந்துகொள்கிறார். இந்த புரிதல் எங்கள் மூன்று பேருக்குமே இருக்கிறது. நாங்கள் மூவருமே இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இப்பொழுது என்னுடைய நோக்கமெல்லாம் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார் காஜல்.

Advertisement