பிக் பாஸிற்கு பின் கவினை நினைத்து கண் கலங்கிய லாஸ்லியா. வைரலாகும் வீடியோ.

0
25734
kavin-los
- Advertisement -

இந்த வருடம் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் திருவிழா போன்று கோலாகலமாக முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட வேற லெவல் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை. அதுமட்டும் இல்லாமல் மற்ற சீசன்களை விட இந்த சீசன் 3 நிகழ்ச்சிக்கு மட்டும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏன்னா,இந்த சீசன் அந்த அளவிற்கு வெறித்தனமாக இருந்தது.வழக்கம் போல் இந்த சீசனுக்கும் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் தான். இரண்டாவது இடத்தை சாண்டியும்,மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பெற்றார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதுமட்டும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்ட புரோமோக்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தான் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது. பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தர்ஷன்,சாண்டி, கவின்,முகென், அபிராமி,லாஸ்லியா,வனிதா உள்ளிட்ட பலர் பேர் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத் அவர்களும் கலந்துகொண்டார். அதுமட்டும் இல்லாமல் இந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஆட்டம் ,பாட்டம், கொண்டாட்டம் என செட்டே கலை கட்டியது என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : ராசாத்தி சீரியல் நடிகையா இப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்காரு. நீங்கா பாத்தா ?

- Advertisement -

இதனைத்தொடர்ந்து பல சுவாரசியமான நிகழ்வுகளும் இந்தக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்தன. ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை நிகழ்ச்சியில் காண்பித்தார்கள். மேலும்,நிகழ்ச்சியில் முகென் பாடலும்,சாண்டியின் நகைச்சுவை நடனமும் அட்டராசிட்டியாக இருந்தது. இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவத்தை குறித்து பேசத் துவங்கும் போது அவரை பேச விடாமல் ரசிகர்கள் கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்து வந்தது. மேலும்,இதை பார்த்த கோபிநாத் அவர்கள் ‘இது தானா சேர்ந்த கூட்டமா’? என்று கூறினார். மேலும்,கவின் தம்பியாக பார்த்து பழகி விட்டு தற்போது கிடைக்கும் இந்த கைத்தட்டல்களை பார்க்கும்போது நமக்கு கொஞ்சம் பயமாக உள்ளது.

அந்த அளவில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சேர்த்து விட்டார் என்றும் கூறினார். மேலும் கவினுக்கு கிடைத்துள்ள இந்த கைதட்டலும் பாராட்டும் பார்த்து கவினின் காதலி லாஸ்லியா கண்கலங்கினார். மேலும், அவர் கண் கலங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதோடு கவின்,லாஸ்லியா இருவரும் தங்களுடைய காதல் குறித்து இந்த பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசுவார்கள் என பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால், இன்னும் அவர்கள் காதல் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. மேலும், இவர்கள் காதல் குறித்து பல கேள்விகள் சமூக வலைதளங்களில் தற்போது வரை எழுந்த வண்ணம் தான் உள்ளன.

-விளம்பரம்-
Advertisement