காஜலை டார்ச்சர் செய்த நபர்.. போன் நம்பர் மூலம் சிக்கியதால் பின்னர் அவருக்கு நேர்ந்ததை பாருங்க..

0
5256
kajal
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகையாகும் பிக் பாஸ் சீசன் ஒன்றின் போட்டியாளராகவும் ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை காஜல் பசுபதி. நடிகை காஜல் பசுபதி நடன இயக்குனரும் பிக் பாஸ் சீசன் 3 யின் போட்டியாளரான சாண்டியுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்த சாண்டி பின்னர் அவரை திருமணமும் செய்து கொண்டார்.சாண்டிக்கும் காஜலுக்கு திருமணத்திற்கு பின்னர் இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் சமீபத்தில் ஊடகத்தில் செய்திகள் பரவியது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் காஜலிடம் கேட்டுள்ள போது, எனக்கு எந்த குழந்தையும் இல்லை, அதை நான் தவறவிட்டு விட்டேன். இதை பற்றி நான் பல முறை அவரிடம் சொனேன். தற்போது வரை அதை நினைத்து நான் வருத்தப்பட்டு வருகிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், சாண்டி தன்னை விட்டு பிரிந்ததற்கான காரணத்தை கூறிய காஜல், என்னுடைய பிரேக் அப் பெரிய கதை, நம்ம லவ் டார்ச்சர் தான். வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா என்று பதில் கூறியுள்ளார். மேலும், எப்போதும் நான் அவருக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான் என்றும் கூறியிருந்தார். சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார் காஜல். ஆனால், இறுதி போட்டிக்கு கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக இவரையும் சாண்டியையும் இணைத்து பேசியதால் இனி பிக் பாஸ் குறித்து பேசவே மாட்டேன் என்று கூறிஇருந்தார். மேலும், கடந்த சில நாட்களாக முன்பை போல ட்விட்டரில் ஆக்ட்டிவாக இல்லாமலும் இருந்து வந்தார் காஜல்.

- Advertisement -

இந்த நிலையில் காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான விஷயம் ஒன்றை பதிவிட்டிருந்தார். கடந்த சில நாட்களாக தனக்கு ஒரு நபர் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அவரை போலீசில் பிடித்து கொடுத்ததும். அந்த நபருக்கு இருந்த பண பலத்தை வைத்து அவர் தப்பித்து விட்டார். ஆனால், தற்போது பல்வேறு வெவ்வேறு நம்பர்களிடம் இருந்தது தனக்கு பல ஆபாச மேசேஜ் வருகிறது என்றும், நான் பல நம்பர்களை பிளாக் செய்த பின்னரும் என்னை வெவ்வேறு நம்பர்களில் இருந்து டார்ச்சர் செய்கிறாரகள் என்றும் பதிவிட்டிருந்தார் காஜல்.

மேலும், தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நம்பர்களை பிளாக் செய்படாதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் பதிவிட்டிருந்தார். இதனால் அவர் பதிவிட்ட ந,நம்பர்களை வைத்து சில ட்விட்டர் வாசிகளும் அந்த நம்பர் யாருடையது என்று கண்டுபிடிக்க உதவினார்கள். பின்னர் அடுத்த சில மணி நேரத்தில் தனக்கு ஆபாச மேசேஜ் அனுப்பிய நபரின் வாட்ஸ்அப் புகைப்படத்தை பகிர்ந்தார் காஜல். மேலும், இந்த நபரை கண்டுபித்தால் எனக்கு சொல்லுங்கள். அவனை நான் பளார் என்று அறைய வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

காஜல் பதிவிட்ட இந்த நம்பரை வைத்து ட்விட்டர் வாசி ஒருவர் அந்த மர்ம நபருக்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு செம காய்ச்சு காசியுள்ளார். தனது புகைப்படம் ட்விட்டரில் பதிவானதை அறிந்த அந்த நபர் மன்னிப்பு கேட்டதுடன் தனது நம்பரை ட்விட்டர் பக்கத்தில் இருந்து காஜலை நீக்குமாறும் கெஞ்சி கேட்டுள்ளார். பின்னர் இந்த பதிவுகளை அந்த ட்விட்டர் வாசி காஜலுக்கு ஷேர் செய்து அந்த நபர் மன்னிப்பு கேட்கிறார் என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தார். ஆனால், காஜலோ அவனை விடகூடாது. கண்டிப்பாக அவனை நான் ஒரு அரை அறைய வேண்டும். மேலும், அவனை சிறை கம்பிக்கு பின்னால் நான் பார்க்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement