விஜய் – கவினுக்கு மட்டும் பிறந்தநாள் இல்ல – இன்னிக்கு இந்த பிக் பாஸ் நடிகையின் பிறந்தநாளும் கூட.

0
1646
vijaykavin
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற பட்டத்துடன் திகழ்ந்து வரும் விஜய் இன்று (ஜூன் 22) பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இவரை விட இவரது ரசிகர்கள் தான் இவரது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இவரை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சின் மூலம் பலரது மனதை கவர்ந்த கவினுக்கும் இன்று தான் பிறந்தநாள். விஜய் மற்றும் கவினின் பிறந்தநாள் என்பதால் #HBDKavin, #HappyBirthdayVijay போன்ற ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது

விஜய் மற்றும் கவின் பிறந்தநாளை முன்னிட்டு இவர்களின் இரு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் வாழ்த்து மழைகளை பொலிந்து வருகின்றனர். மேலும், இவர்களின் டிபிகளையும் தங்களது dpகளாக வைத்து வருகின்றனர். அதே போல இன்று விஜய் மற்றும் கவினுக்கு மட்டும் பிறந்தநாள் அல்ல நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான காஜல் பசுபதிக்கும் பிறந்தநாள் நாள் தான்.

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் நடிகை காஜல் பசுபதி. பிக் பாஸ் நிகழ்ச்ஜ்யில் பங்குபெறுதற்கு முன்பாக பல்வேறு திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானதை அடுத்து, இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. அதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். இறுதியாக கலகலப்பு 2 படத்திலும் நடித்திருந்தார்.

எப்போதும் வெளிப்படையாக பேசும் காஜல் ரசிகர்கள் மத்தியிலும் கொஞ்சம் நல்ல பெயரை பெற்றிந்தார். மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்குபெற்ற சாண்டியின் முன்னாள் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. சாண்டியை பிரிந்தாலும் இவர் தற்போது சாண்டி குடும்பத்துடன் நல்ல உறவில் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement