இதுவே நிஷா ‘இன்ஷாஅல்லாஹ்’னு சத்தம் போட்டு சொல்லி இருந்தா- சுரேஷ் செயலால் கடுப்பான காஜல்

0
4911
kajal
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

-விளம்பரம்-

அது போக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக பெரியார் கொள்கைகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அதே போல ட்விட்டரில் தனது கருத்துக்களை தைரியமாக முன் வைத்து வருபவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல் பசுபதியிடம் தற்போது பிக் பாஸ் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியளார்கள் பற்றி பேசியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சுரேஷ், பிக் பாஸ் வீட்டில் நுழைந்த போது பாலாஜி முருகதாஸை என்ன ஜாதி என்று கேட்டதையும், வேல் முருகன் தன்னுடைய பெயரை சொன்ன உடன் ‘வேல் முருகா வேல்’ என்ற பாடலை பாடியதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார் காஜல். இதுகுறித்து அவர் பேசுகையில் ”வனிதாவை போல ஆக நினைப்பது சுரேஷ் என்றுதான் தோன்றுகிறது. அவர் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் பிக் பாஸுக்கு வந்திருக்கிறார். அப்படி செய்தால் தான் பிக்பாஸ் வைத்திருப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

வீடியோவில் 2 : 58 நிமிடத்தில் பார்க்கவும்

அதெல்லாம் சரிதான் ஆனால் ஜாதி சாமி இதையெல்லாம் எடுக்காமல் செய்தால் நன்றாக இருக்கும் உள்ளே நுழைந்த முதல் நாளே எந்த ஜாதி என்று கேட்டது எல்லாம் தேவை தானா ? அது எல்லாம் தேவையில்லாத ஆணி. அதே போல உள்ளே நுழைந்த உடனேயே ‘வெற்றிவேல் வீரவேல்’ என்று சத்தம் போட்டு படுகிறார். நான் ஒன்று கேட்கிறேன் இதையெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனுமதி இருக்கிறதா ? இப்படி எல்லாம் நான் இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன். இதுவரை யாராவது பிக்பாஸ் வீட்டில் கத்தி சாமி பெயரை சொல்லி பார்த்திருக்கிறீர்களா ? ஒருவேளை நிஷா உள்ளே போனதும் இன்ஷா அல்லாஹ் என்று கத்தி சொன்னால் என்ன செய்வார்கள். அது மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கும் அதே போல ஒரு கிறிஸ்துவர் உள்ளே சென்று அல்லேலூயா என்று சத்தம் போட்டு சொன்னால் அங்கே இருக்கும் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement